பிரபல முன்னணி நடிகைக்கு கொரோனா..! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Published : Apr 06, 2021, 07:58 PM IST
பிரபல முன்னணி நடிகைக்கு கொரோனா..! அதிர்ச்சியில் திரையுலகினர்!

சுருக்கம்

பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவையே மீண்டும் கதிகலங்க வைத்துள்ளது கொரோனா.  கடந்த வருடம் மார்ச் மாதம் தன்னுடைய கொடூர முகத்தை இந்தியாவில் காட்டத் துவங்கிய கொரோனா பின்னர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின் சற்று குறைந்து. இதை தொடர்ந்து மீண்டும் கடந்த மாதத்திலிருந்து அதிக அளவில் பரவி வருகிறது.  இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அக்ஷய்குமார்,  பின்னர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரே தெரிவித்திருந்தார்.

மேலும் இவர் கடைசியாக இயக்குனர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் நடித்து வந்த 'ராம் சேது' படத்தின் படக்குழுவினர் 100  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அதில் 45 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது பேரதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரபல நடிகை காத்ரீனா கைஃப்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்திகொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தெரிவித்துள்ளதாவது... "இன்று எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்த வீட்டில் நான் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பு மட்டும் ஆதரவுக்கு நன்றி. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தொடர்ந்து, விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Best Cinema Fathers : தமிழ் சினிமாவின் டாப் 10 அப்பாக்கள் யார்? யார்? | Father's Day Special
Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்