அம்மாடியோவ்!! தல அஜித்துக்கு இவ்வளவு கோபம் வருமா?... தீயாய் பரவும் வைரல் வீடியோ...!

Published : Apr 06, 2021, 04:48 PM IST
அம்மாடியோவ்!! தல அஜித்துக்கு இவ்வளவு கோபம் வருமா?... தீயாய் பரவும் வைரல் வீடியோ...!

சுருக்கம்

அப்போது தல அஜித்தின் முகத்திற்கு நேராக ரசிகர் ஒருவர் செல்போனை கொண்டு சென்று செல்ஃபி எடுக்க முயன்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் ஜனநாயக கடமையாற்றினார். திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்னதாகவே தல அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று காத்திருந்தார். 

அஜித் வாக்குச்சாவடிக்கு வருவதை பார்த்த ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தனர். காவல்துறையினர் கூட்டத்தை எல்லாம் கட்டுபடுத்தி அஜித் மற்றும் ஷாலினியை வாக்குப்பதிவு மையத்திற்குள் கொண்டு சென்றனர். அப்போது தல அஜித்தின் முகத்திற்கு நேராக ரசிகர் ஒருவர் செல்போனை கொண்டு சென்று செல்ஃபி எடுக்க முயன்றார்.

ஏற்கனவே கூட்ட நெரிசலில் சிக்கித் தள்ளாடிய அஜித், வாக்குச் சாவடிக்குள் வந்தும் ரசிகர்கள் தன்னை சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட கோபம் காரணமாக செல்ஃபி எடுக்க முயன்றவரின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார். அதன் பின்னர் தன்னைச் சுற்றியிருந்த ரசிகர்களையும் விலகிச் செல்லும் படி கையால் ஜாடை காண்பித்து விரட்டினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன் பின்னர் அந்த ரசிகரை எச்சரித்த அஜித், சிறிது நேரம் கழித்து செல்போனை திரும்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!
Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்