
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வாக்களித்த பின்னர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் செம்ம ஷாக் ஆகியுள்ளார். இதில் பார்க்கவே மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய் உள்ளார் லோகேஷ்.
மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும் பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் பூரண குணம் அடைந்தது அனைவரும் அறிந்தது தான். மேலும் பாலிவுட்டின் டாப் நடிகரான அமீர்கான், மாதவன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனராஜுக்கு கொரோனா தொற்று உறுதி கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள லோகேஷ் கனகராஜ், தன்னுடைய ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவு செய்துள்ளார்.
பிரபலங்கள் பலரும் வாக்களித்து விட்டு தங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு வரும் நிலையில், லோகேஷ் கனகராஜும் புகைப்படம் வெளியிட்டார். இதில் பார்க்கவே மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.