ஆரம்பிக்கலாங்களா..? தேர்தல் முடிந்த கையேடு கமலுடன் கை கோர்த்த லோகேஷ்!

Published : Apr 07, 2021, 02:06 PM ISTUpdated : Apr 07, 2021, 02:45 PM IST
ஆரம்பிக்கலாங்களா..? தேர்தல் முடிந்த கையேடு கமலுடன் கை கோர்த்த லோகேஷ்!

சுருக்கம்

விரைவில் படப்பிடிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக ஒரு ட்விட் போட்டுள்ளார். 

'மாநகரம்', 'கைதி' உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே, திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகியது. படம் ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் சுமார் 200 கோடி வசூல் சாதனை செய்தது. மேலும் கொரோனா அச்சத்தின் நடுவிலும் பல திரையரங்கங்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் கமலஹாசனை வைத்து 'விக்ரம்' என்கிற படத்தை இயக்க தயாரானார் லோகேஷ் கனகராஜ்.  கமல்ஹாசனின் பிறந்தநாள் ட்ரீட்டாக, விக்ரம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அனைத்து அசைவ உணவுகளையும் வைத்து டீசரை பார்க்க வைத்தே வித்தியாசமாக ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த கமல். கர்ஜனை குரலில் ஆரம்பிக்கலாமா என மிரட்டி, இரு கோடரிகளை தூக்கி எறிவது போன்று இந்த டீசரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

பின்னர் கமல், தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் படப்பிடிப்பு பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றொரு முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இடையில் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது உடல் நலம் தெரியுள்ளார். இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார்.

விரைவில் படப்பிடிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், உலகநாயகன் கமலஹாசனுடன் அமர்ந்து 'ஆரம்பிக்கலங்களா' என கேட்டுள்ளார். இதில் இருந்து விரைவில் கமல் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இந்தியன் 2 படத்திலும் கவனம் செலுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?