கணவரால் ஏற்பட்ட சோகம்..! மீண்டும் நடிக்க வந்த பூமிகா?

 
Published : Jan 10, 2018, 07:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
கணவரால் ஏற்பட்ட சோகம்..! மீண்டும் நடிக்க வந்த பூமிகா?

சுருக்கம்

bomika again acting for money problem

அறிமுகம்: 

பத்ரி படத்தின் மூலம்  விஜய்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை பூமிகா இந்தப் படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து  பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

திரைப்பயணம்:

தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிப் படங்களில் இவர் கவர்ச்சியாக நடித்தாலும் தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களிலும் குடும்பப் பாங்கான வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். 

இவர் தமிழில் தேர்வு செய்து நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல மார்க்கெட் இருக்கும் போதே கடந்த 2007 ஆம் ஆண்டு பாரத் தாகூர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.  பின் தமிழ் சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

சில ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான டோனி படத்தில் சுஷாந்திற்கு சகோதரியாக நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் 'களவாடிய பொழுதுகள்' படம் வெளியாகி இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.

மீண்டும் திரையில் பூமிகா: 

தற்போது படங்கள் சிலவற்றில்  நடிக்க இவரிடம் இயக்குனர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியான தகவலில் நடிகை பூமிகாவின் கணவர் ஒரு படத்தை தயாரித்து அந்தப் படம் தோல்வி அடைந்ததால் அவருடைய குடும்பத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சமாளிப்பதற்காக மீண்டும் பூமிகா நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது.

மறுப்பு:

இதற்கு பதில் அளித்துள்ள இவர், என்னுடைய கணவர் தயாரித்த படம் தோல்வி அடைந்தது உண்மைதான். வசூல் ரீதியாக இந்தப் படம் நிலைக்கா விட்டாலும், நல்ல படம் எடுத்தோம் என்கிற பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது.

நிதி நெருக்கடியால் நான் படம் நடிக்க வரவில்லை... படத்தின் கதை எனக்குப் பிடித்ததால் தான் நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?
சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!