கேப்டன் விஜயகாந்தைத் தொடர்ந்து தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... அலறியடித்து சோதனையில் இறங்கிய போலீசார்!

Published : Oct 13, 2020, 03:28 PM IST
கேப்டன் விஜயகாந்தைத் தொடர்ந்து தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... அலறியடித்து சோதனையில் இறங்கிய போலீசார்!

சுருக்கம்

இந்த கலவரத்தில் இருந்து போலீசார் மீள்வதற்குள் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், அபிராமபுரத்தில் உள்ள தனுஷ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கடந்த ஜூன் 18ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட, மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் ரஜினி வீட்டை சோதனையிட்டனர். அதன் பின்னர் அந்த போன் கால் வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், எச்சரித்து அனுப்பினர். 

இதையும் படிங்க: தனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...!


இந்நிலையில் ஜூலை 4ம் தேதி அன்று தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார். உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டை சல்லடை போட்டு சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. 

இதேபோல் தல அஜித் வீட்டிலும் வெடிகுண்டு உள்ளதாக  போன் வர அங்கும் சோதனை நடைபெற்றது. ஆனால் அதுவும் வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் மரக்காணத்தைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் விஜய், அஜித் வீடுகளில் வெடிகுண்டு உள்ளதாக போன் செய்தது தெரியவந்தது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகத்திற்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து நடந்த சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: இரவில் யாஷிகாவை தவிக்கவிட்டு தப்பியோடிய பாலாஜி முருகதாஸ்... கிழியும் பிக்பாஸ் பிரபலத்தின் முகமூடி..!

இந்த கலவரத்தில் இருந்து போலீசார் மீள்வதற்குள் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், அபிராமபுரத்தில் உள்ள தனுஷ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபர் தான், தனுஷ் குறித்தும் போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகர் தனுஷ் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Parimala And Co Movie Day 1 Box Office : பரிமளா அண்ட் கோ முதல் நாளில் வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?
Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி