Movie 800 Tamil : விஜய் சேதுபதிக்கு பதில் இவரா? முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் கமிட் ஆனா பாலிவுட் ஹீரோ

Kanmani P   | Asianet News
Published : Jan 10, 2022, 05:26 PM ISTUpdated : Jan 10, 2022, 06:26 PM IST
Movie 800 Tamil : விஜய் சேதுபதிக்கு பதில் இவரா? முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் கமிட் ஆனா பாலிவுட் ஹீரோ

சுருக்கம்

Movie 800 Tamil : முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த 800 படத்தில் நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி விலகிய நிலையில், அவருக்கு பதில் பிரிட்டனை சேர்ந்த தேவ் படேல் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி இருந்தார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்திற்கு 800 என பெயர் வைத்துள்ளனர். போஸ்டரில் விஜய் சேதுபதி பார்க்க அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே இருந்தார். விஜய்சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் பலர் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர். 

பல்வேறு சூழ்நிலைகளில் முரளிதரன் இலங்கை அரசுக்கும் ராஜபக்சேவுக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளநிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன.  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இலங்கை தமிழர்கள் என முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. விஜய்சேதுபதியின் ரசிகர்கள் உட்பட பலரும் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசின் கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு நீங்கள் நடிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தனர். 

பின்னர் விஜய்சேதுபதி 800 படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதே நேரத்தில் விஜய்  இல்லாமல் தனது வரலாறு உருவாகாது என கூறி முத்தையா முரளிதரன் படத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் பாலிவுட்டில் ஹிட் அடித்த ஸ்லம்டாக் மில்லியனர், தி லாஸ்ட் ஏர்பென்டர், சாப்பி, ஹோட்டல் மும்பை, தி வெட்டிங் கெஸ்ட் உள்பட பல படங்களில் நடித்த தேவ் படேல் நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. பிரிட்டனை சேர்ந்த இவர் தற்போது மங்கி மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!