
சினிமா வாழ்க்கை மட்டுமல்லாது காதல் வாழ்விலும் பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்தார் சிம்பு. சிம்புவின் வாழ்க்கையில் தன்னை விட வயது அதிகமானவரை சிம்பு காதலித்துள்ளார். இவரின் முதல் காதல் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடையாது. அரசல் புரசலானதுதான். அதுவும் அத்தனையும் அவரே பரப்பிவிட்டது என்கிறார்கள். பெரிய இடத்து பெண் என்பதால் அந்த காதல் பெரிதாக பேசப்படவில்லை.
இந்த காதல் தோல்வியை மையமாக வைத்தே சிம்பு வல்லன் என்னும் படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். நயனின் உதடுகளை கடித்தபடி இவர் அடித்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின.
அதோடு சிம்புவும் - நயனும் மிக அந்தரங்கமாக இருந்த சில படங்கள் வெளியாகின. இந்த நயன்தாராவுக்கு தெரியாமல் சிம்பு ஆள் வைத்து எடுத்தார் என சொல்லப்பட்டது. இதன்காரணமாகவே நயன்தாரா சிம்புவை வெறுத்து காதல் ரத்து செய்து கொண்டார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் ஹன்சிகாவுடன் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஒப்பந்தமானார் சிம்பு. அப்போதே இருவருக்கும் காதல் என செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை ட்வீட்டர் வாயிலாக காதலை அறிவித்தனர்.
ஆனால் வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே இந்த காதல் நீண்டது. காரணம் ஏதும் கூறாமல் இருவரும் காதல் ரத்து செய்து கொண்டனர். ஆனாலும் தற்போது மீண்டும் மகா படத்தில் நடிக்கும்போது சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இடையில் அந்த பழைய காதல் துளிர்விட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு தொடர் காதல் தோல்விகளின் காரணமாக மனம் நொந்த சிம்பு கோவில், வழிபாடு என ஆன்மிகம் பக்கம் சாய்ந்து விட்டார். அதோடு பட வாய்ப்பிற்காக 110 கிலோ இடையிலிருந்த சிம்பு படாதபாடுபட்டு தனது பழைய தோற்றத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் சிம்புவின் காதல் வாழ்க்கையில் வசந்தம் வீச துவங்கியுள்ளதாக தெரிகிறது. ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு களத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு சமீபகாலமாக சிம்பு-நிதி அகர்வால் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.