பிரபல நடிகை மந்திரா பேடி கணவர் மாரடைப்பால் திடீர் மரணம்! அதிர்ச்சியில் பாலிவுட்!

Published : Jun 30, 2021, 11:21 AM IST
பிரபல நடிகை மந்திரா பேடி கணவர் மாரடைப்பால் திடீர் மரணம்! அதிர்ச்சியில் பாலிவுட்!

சுருக்கம்

பிரபல நடிகை மந்திரா பேடியின் கணவரும், பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜ் கௌஷல், இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபல நடிகை மந்திரா பேடியின் கணவரும், பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜ் கௌஷல், இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உயர்ந்துள்ள ராஜ் கௌஷல், ஒரு நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மூன்று படங்களையும் இயக்கி உள்ளது மட்டும் இன்றி 500 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கியுள்ளவர். பின்னர் நடிகை மந்திரா பேடியை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வீர் என்கிற மகனும், தாரா என்கிற வளர்ப்பு மகளும் உள்ளனர். பாலிவுட் திரையுலகமே வியர்ந்து பார்க்கும் அளவிற்கு அன்பான நட்சத்திர ஜோடியாக இந்த தம்பதிகள் வலம் வந்தனர்.

மேலும் செய்திகள்: அடுத்தடுத்த அதிர்ச்சி... மகனை தொடர்ந்து கொரோனாவிற்கு கணவரை பறிகொடுத்த பிரபல நடிகை கவிதா..!
 

இந்நிலையில் இன்று அதிகாலை நடிகை மந்திரா பேடியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ராஜ் கௌஷல்  மாரடைப்பால் திடீர் என உயிரிழந்துள்ளார். இதனை, பாலிவுட் வட்டாரத்தை சேர்ந்த பிரபலங்கள் உறுதி செய்து தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இவரது புகைப்படத்தை பகிர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஸ்டைலிஷ் ஸ்லிம் லுக்... சும்மா ப்ளூ மூன் போல் பளீச் என பிரகாசிக்கும் பிரியா பவானி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

நடிகை மந்திரா பேடி பல பாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். குறிப்பாக, நடிகர் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். பல்வேறு நிகழ்ச்சிகளையும் பாலிவுட் திரையுலகில் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் 'அடங்காதே' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டும் இன்றி, நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 'Saaho'  படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒன்னில்ல ரெண்டில்ல அடுத்தடுத்து 5 புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி - அதன் முழு லிஸ்ட் இதோ
விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ