நடிகை ஆலியா பட்டின் யோகா பயிற்சியாளரான அனுஷ்கா பர்வானி என்பவர் தண்ணீரை குடிப்பதற்காக சரியான நடைமுறையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
உடலில் நீர்ச்சத்து இருப்பது அவசியமான ஒன்று. ஏனெனில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் முக்கிய பங்காற்றி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதனால், அது நமது சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் தனது உயிரணுக்களுக்குள் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லவும், செரிமானத்திற்கு இந்த நீர்ச்சத்து உதவுகிறது.
மேலும், இது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது, நமது உறுப்புகள் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை இது கட்டுப்படுத்துகிறது. உடலை ஆரோக்கியமாக பராமரிக்க நாள் முழுவதும் தவறாமல் தண்ணீர் குடிப்பது அவசியம். அந்த தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாலிவுட் ஹீரோயின்களான கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் யோகா பயிற்சியாளரான அனுஷ்கா பர்வானி என்பவர் தண்ணீரை குடிப்பதற்காக சரியான நடைமுறையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது : ”தண்ணீர் குடிக்க சரியான வழி இருக்கிறதா என்று கேட்டால் ஆம், இருக்கிறது என்று தான் சொல்வேன். உடலில் நீரின் அளவு குறையாமல் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், அதற்குச் சரியான வழியும் இருக்கிறது.
இதையும் படியுங்கள்... 2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் கோடி கோடியாய் வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள் - முழு லிஸ்ட் இதோ
நின்று கொண்டே தண்ணீர் குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அனுஷ்கா பர்வானி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி நின்றுகொண்டே தண்ணீர் குடித்தால் அது மூட்டுவலியை ஏற்படுத்தக்கூடும் என்றும் உடலில் பயணிக்கும் நீரின் வேகம் அதிகரிக்கும் போது அது நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
நேராக நிமிர்ந்து உட்கார்ந்தபடி தண்ணீர் குடிப்பது தான் சரியான வழி என்றும் அவர் அதில் கூறி உள்ளார். மேலும் இவ்வாறு செய்வதனால் மூளையின் செயல்பாடு மேம்படும் என்றும் இது செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் அவர் பகிர்ந்துள்ளார், அதன்படி செம்பில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுவதாகவும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். அதிக அளவு தண்ணீர் குடிப்பதைவிட, சரியான முறையில் தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அனுஷ்கா பர்வானி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான மனைவி... அப்பா ஆகப்போகும் குஷியில் ஆர்.ஆர்.ஆர் நாயகன்