
முத்தக் காட்சிகளில் நடிக்க மறுத்தத்தால் பட வாய்ப்பை இழந்தவர்கள் என எத்தனையோ பேரை நாம் சினிமா உலகில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக நடிகைகள் முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு, கவர்ச்சியாக நடிப்பதற்கு நோ சொன்னதால் ஒன்றிரண்டு படங்களுடன் அவர்கள் காணாமல் போவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இதெல்லாம் கோலிவுட்டோடு சரி. பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் என்ன ஆனாலும் சரி, எதற்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என முத்தம் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்பதை சினிமாவிற்கு நடிக்க வந்த நாள் முதல் தற்போது வரை உறுதியாக பின்பற்றி வருகிறார்கள். அப்படி முத்தக் காட்சிகளில் நடிக்காமலேயே சினிமாவில் உச்சம் தொட்ட பாலிவுட் பிரபலங்கள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.
முத்தக் காட்சிகளில் நடிக்க மறுத்தவர்கள் என்று சொன்னதும் யாரோ முகம் தெரியாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சல்மான் கான் முதல் ஷில்பா ஷெட்டி வரை, மிருனால் தாகூர் முதல் பல பிரபலங்கள் முத்தக் காட்சிகள் நடிக்க வேண்டி இருந்தால் அந்த பட வாய்ப்பே வேண்டாம் என உதறி உள்ளார்கள். இந்த லிஸ்டில் இன்னும் எந்தெந்த பிரபலங்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
சோனாக்ஷி சின்கா :
நடிகை சோனாக்ஷி சின்கா தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் முத்தக் காட்சிகளில், குறிப்பாக லிப் லாக் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்ற கன்டிஷனை தன்னிடம் படத்திற்காக பேச வருபவர்களுடன் முதலில் சொல்லி விட்டு, அதற்கு அவர்கள் ஓகே சொன்னால் மட்டும் தான் மேற்கொண்டு பேசுவாராம்.
சல்மான் கான் :
பாலிவுட்டின் டாப் ஹீரோவான சல்மான் கானை காதல் மன்னன் என்பார்கள். இவர் பாலிவுட்டிற்கு நடிக்க வந்தது முதல் முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை உறுதியாக பின்பற்றி வருகிறார். ராதே படத்தில் சல்மான் கான் தன்னுடைய கொள்கையில் இருந்து விலகியதாக கூட சொன்னார்கள். ஆனால் அதற்கும், திஷா பதானிக்கு தான் முத்தம் கொடுக்கவில்லை. அந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பதையும் சல்மான் கான் விளக்கி உள்ளார்.
கங்கனா ரணாவத் :
மிக இளம் வயதிலேயே நடிக்க வந்தவர்களில் கங்கனாவும் ஒருவர். இவர் ஹீரோயினாக நடிக்க துவங்கியதில் இருந்தே தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதியான முடிவோடு இருக்கிறார்கள். இதனாலேயே அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து கங்கனா நடிக்க துவங்கினார்.
ஷில்பா ஷெட்டி :
பல சினிமாக்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பாலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்த ஷில்பா ஷெட்டி, ரிச்சர்டு கிரே எபிசோடிற்கு பிறகு தன்னுடன் நடிக்கும் ஆண் நடிகர்களுடன் நெருகு்கமாக நடிக்க மாட்டேன். முத்தக் காட்சிகளில் கூட நடிக்க மாட்டேன் என்பதை ஸ்டிரிட்டாக பின்பற்றி வருகிறார் ஷில்பா ஷெட்டி.
மிருனால் தாகூர் :
தான் முத்தக் காட்சிகளில் நடிப்பதை தன்னுடைய பெற்றோர் விரும்பவில்லை என்றும், அவர்களுடன் சேர்ந்து தன்னுடைய படத்தை பார்க்க கூச்சப்படுவதாலும் தான் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும் படங்களுக்கு நோ சொல்லி வருகிறார் மிருனால் தாகூர்.
ஃவத் கான்
பாகிஸ்தானிய நடிகரான ஃபவத் கான் நோ கிஸ்ஸிங் பாலிசியை மிக தீவிரமாக பின் பற்றி வருபவர். அதனால் ஆக்ஷன் படங்களில் மட்டுமே தான் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறி வருகிறார்.
ரிதேஷ் தேஷ்முக் :
ரிதேஷ் தேஷ்முக் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் தன்னுடைய படங்களில் முத்தக் காட்சிகளிலோ அல்லது நெருக்கமான காட்சிகளிலோ நடிக்காமல் விலகியே இருப்பவர்களில் இவரும் ஒருவர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.