
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகமான நடிகர் பாபி சிம்ஹா, இந்தப் படத்தை தொடர்ந்து 'பீசா', 'சூதுகவ்வும்' ஆகிய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் ஜிகிர்தண்டா படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இவர் தேர்வு செய்து நடித்தப் படங்கள் இவருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்க்கு வெற்றியை கொடுக்கவில்லை.
தற்போது இவர் நடிகர் விக்ரம் நடித்து வரும் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்து பாபி சிம்ஹா ஒரு வெப் சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டர் என்றும் பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்க உள்ளதாகவும் இந்தப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் மாதவன் Breathe என்கிற வெப் சீரியலில் நடித்தார் இந்த சீரியல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது நிலையில். பாபி சிம்ஹாவும் தற்போது வெப் சீரியலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். மேலும் இவர் வெப் சீரியலில் நடிக்க காரணம் பட வாய்புகள் இல்லாதது என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.