
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சிறந்த குடும்பத்தலைவியாக எப்படி குழந்தைகளையும், கணவரையும் அன்பாக பார்துக்கொள்கிறாரோ அதே போல் திரைப்படம் இயக்குவது ஆடல், பாடல் என தனக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து கலக்கி வருகிறார்.
கடந்த வருடம்:
இவர் கடந்த ஆண்டு உலக மகளிர் தினத்தன்று ஐக்கிய நாட்டு சபையில் இவருடைய பரதநாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரதம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை பெற்றார்.
ஆனால் இவர் கடந்த வருடம் அங்கு ஆடிய நடனம் சமூக வலைத்தளத்தில் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.
இந்த வருடம்:
இந்த நிலையில் இந்த வருட மகளிர் தினத்தில் பாடல் ஒன்று பாடியுள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரணி இசையில் உருவாகி இருக்கும் இந்த மகளிர் தின ஸ்பெஷல் பாடலை ஐஸ்வர்யா தனுஷ் பாடியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.