
சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே பல்வேறு வகைகளில் விமர்சித்து வந்தார். அந்த விமர்சனங்கள் பெரும்பாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
‘கூலி’ படத்தின் டிக்கெட் விலை அதிகமாக விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இப்படி எல்லாம் செய்துதான் ஆயிரம் கோடி வசூல் வடைகளை சுடப் போறீங்களா?" என்று கேலியாக கேள்வி எழுப்பி இருந்தார். குறிப்பாக, கும்பகோணத்தில் ஒரு திரையரங்கில் டிக்கெட் விலை ₹190-200 இருக்க வேண்டிய இடத்தில் ₹400-க்கு விற்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
கூலி படத்தின் டிரெய்லரில் ரஜினிகாந்த் காக்கா சத்தத்தை கலாய்ப்பது போன்ற காட்சியை விமர்சித்த மாறன், இது விஜய்யை மறைமுகமாக சீண்டுவதற்காக வைக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார். "விஜய் மீதான கோவமும், எரிச்சலும், பயமும் தெளிவாகத் தெரிகிறது" என்று கூறி, ரஜினியை "இனியாவது இப்படி புலம்புவதை நிறுத்துங்கள்" என்று விமர்சித்தார். இது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
"கூலி" படத்தில் நடிகர் சௌபின் சாஹிரை "வழுக்கை" என்று ரஜினிகாந்த கேலி செய்ததாகக் குறிப்பிட்டு, அதற்கு எதிராக கடுமையான விமர்சனம் செய்து, நீங்கள் டோப்பாவை கழற்றி விட்டு நடிக்கத் தயாரா? என சவால் விடுக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.
"கூலி" படத்தின் முன் விளம்பரங்கள் குறித்து மாறன் கிண்டலாக பதிவிட்டு, "முதல் பாதியை பார்த்து அசந்து போன ரஜினி", "தமிழில் முதல் 1000 கோடி படம் கூலி" போன்ற தலைப்புகளை பட்டியலிட்டு, இவை படத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டார்.
ப்ளூசட்டை மாறன், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’, ‘வேட்டையன்’ போன்றவற்றை கடுமையாக விமர்சித்து இருந்தார். கூலி படத்திற்கு முன்பே அவர் தனது விமர்சனங்களை தொடங்கிய அவர் படம் வெளியான பிறகு மேலும் கடுமையாக விமர்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு மீம்ஸை தனது எக்ஸ்தளப்பதிவில் பகிர்ந்துள்ள அவர், கமல், லோகேஸ் கனகராஜுக்கு கை கொடுப்பதை போன்ற ஒரு மீம்ஸை பகிர்ந்துள்ளார்.
https://x.com/tamiltalkies/status/1955858065707950341/photo/1
அதன் அர்த்தம் என்னவென்றால் ரஜினிக்கு தோல்வி படத்தை கொடுத்ததற்காக கமல் லோகேஸுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிப்பது போன்ற அர்த்தத்தில் பகிர்ந்துள்ளார்.இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.