
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூலி திரைப்படம் இன்று உலகெங்கிலும் ரிலீஸ் ஆகி திரையரங்குகள் அதிர்ந்து கொண்டு இருக்கிறது. ரஜினி, தனது 50 ஆண்டுகால திரைபயணத்தை கொண்டாடும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கூலி’ படத்திற்கு வைப் ஏற்றி வருகிறார்கள் ரசிக சிகாமணிகள். இதனால் கூலி ரஜினிக்கும் சரி, அவரது ரசிகர்களுக்கும் சரி ரொம்பவே ஸ்பெஷல்.
லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்றாலே வன்முறை காட்சிகள் தெறிக்கும். ஆனால், இது ஏ சான்றிதழுடன் வெளியாவதால் இன்னும் அதிகமான வன்முறை காட்சிகள் இடம் பெற்று இருக்கிறதா? என்கிற எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியா உட்பட 100 நாடுகளில் கிட்டத்தட்ட 5000 திரைகளில் இந்த படம் வெளியாகி இருப்பதும் கூடுதல் சிறப்பம்சம்.
தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் முதல் காட்சியாக 9:00 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் காலை ஆறு மணி முதலே அதனுடைய முதல் காட்சி தொடங்கிவிட்டன. அதனால் அங்குள்ள ரஜினி ரசிகர்கள் படத்தை பார்த்து காலையிலிருந்து எக்ஸ் வலைதளத்தில் படத்தை பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் கூலி படத்தை பார்க்க பல பிரபலங்கள் முண்டியடித்து வருகின்றனர். தனுஷ் அவருடைய மகனுடன் ரோகிணி திரையரங்கிற்கு சற்று நேரத்திற்கு முன்பு வந்தார். லோகேஷ் கனகராஜ், அனிருத், சாண்டி மாஸ்டர் என அடுத்தடுத்து பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா கூலி திரைப்படத்தை பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு வந்திருந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘ரஜினியின் 50 ஆவது பொன்விழா வருடம் இது. கூலி படத்திற்காக அவரும் காத்திருக்கிறார். இத்தனை வருடங்களாக ரசிகர்கள் அவருக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் பார்க்கும் பொழுது நன்றி சொன்னால் போதாது. அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
இந்த நேரத்தில் கே.பாலச்சந்தர், பஞ்சு அருணாச்சலம், நடிகர் சோ இவர்களை எல்லாம் நான் மிஸ் பண்ணுகிறேன். கூலி திரைப்படத்தை பார்த்து ரஜினி சாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ரசிகர்களின் விமர்சனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். கூலி அவரது 50 வருட கேரியரிலேயே ரொம்பவே டிபிரெண்டான படம். ரசிகர்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன்’’ எனப் புலங்காகிதப்பட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.