தற்போது வெளியாகி உள்ள செவ்வாய்க்கிழமை பேய் படமாக இருக்கும் என்று பார்த்தால், அடல்ட் ஒன்லி படமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரபல யூடியூபர் ப்ளூ சட்டை மாறன்.
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் புதிய ட்ரெண்டை அறிமுகம் செய்தவர் இயக்குநர் அஜய் பூபதி. அவரது இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள படம் செவ்வாய்க்கிழமை. சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் உடன் இணைந்து தயாரிப்பாளராக, இயக்குநர் அஜய் இதில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.
முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை பற்றி இயக்குநர் அஜய் பூபதி, “இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன, ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது” என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
தீபாவளி வெளியீடாக கார்த்தி நடிப்பில் ஜப்பான் படமும், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வெளியானது. இதில் கார்த்தி நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜப்பான் படம் ரசிகர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இந்த நிலையில் வெளியாகி உள்ள செவ்வாய்க்கிழமை திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை உண்டாக்கி உள்ளது என்றே கூறலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இப்படத்தை பற்றி பிரபல யூடியூபரும், விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அதில்,”ஒவ்வொரு வாரமும் கள்ள காதலில் ஈடுபடுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில், நந்திதா அதனை கண்டுபிடிக்கும் தேடுதலில் ஈடுபடுகிறார். போலீஸ் அதிகாரியான அவர் அந்த கொலை மிஸ்டரியை கண்டுபிடித்தாரா? அல்லது சாதாரண சைக்கோவின் பழிவாங்கல் கதையா? என்றபடி படம் இருக்கிறது.
இப்படம் முழுக்கவே அடல்ட் ஒன்லி காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். ப்ளூ சட்டை மாறன் பல கமர்ஷியல் படங்களை கழுவி ஊற்றி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதால், நிச்சயம் இந்த படம் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..