Vijay Birthday: விஜய்யை நம்பர் 1 இடத்திற்கு உயர்த்திய ஐகானிக் திரைப்படங்கள்...வசூல் நாயகன் பிறந்தநாள் ஸ்பெஷல்

By Anu KanFirst Published Jun 22, 2022, 10:42 AM IST
Highlights

Happy Birthday Vijay -Hit movies: நடிகர் விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வெளியான சில ஐகானிக் திரைப்படங்களின் தொகுப்பு இதுவாகும். 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் டாப் நடிகர்களுள் ஒருவராக விஜய் இருக்கிறார். இவருக்கு, குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்‌ஷன், பாடல் என அனைத்திலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் கொண்டவர். 

விஜய்யின் 48 வது பிறந்தநாள்:

இவர் போடும் துள்ளலான நடனம் வயது குறைந்து இளமை கூடுவது போல் இருக்கும். தந்தையின் மூலம் திரை துறையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இவர் தான் ஒரு திறமையான நடிகர் என்பதை நிரூபித்து காட்டியவர்.  கமர்ஷியல் படங்கள், கலைரீதியான படங்கள் என அனைத்தையும் சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்து காணாது திறமையை வெளிப்படுத்துவார். 

பாக்ஸ் ஆபிஸில்  நம்பர் 1 நாயகன்:

இவரின் ஹிட் லிஸ்டில் இல்லாத படங்கள் கூட 50 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் முதல் வசூல் செய்து விடுகிறது. பாக்ஸ் ஆபிசில் மிக பெரிய சாதனையை பதிவு செய்த முதல் நாயகன் என்றால் அது நம்முடைய தளபதி விஜய் தான். 

காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் இன்று ஆக்சன் நாயகனாக வலம் வருகிறார். 90ஸ் காலகட்டத்தில் காதல் படம் என்றால் அது விஜய்தான். பூவே உனக்காக படத்தில் தொடக்கி, அடுத்தடுத்து லவ் டுடே, காதலுக்கு மரியாதை , துள்ளாத மனமும் துள்ளும், நினைத்தேன் வந்தாய் என ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட படங்கள் ஏராளம்.

1. பூவே உனக்காக காதலை முதன்மையான உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு படமாகும். இன்று விஜய் உச்ச நடிகராக வளர காரணமாக அமைந்தது இந்த படம். ஆபாசமில்லாமல், வக்கிரமில்லாமல் காதலை மென்மையாக கொண்டு சென்ற படமாகும்.

2. மதம் கடந்த காதலைச் சொன்ன ஓர் படமாக காதலுக்கு மரியாதை, ஒரு காவியமாக மக்கள் மனதில் நின்றது. இந்த படத்தின் மூலம் தான் கேரளாவில் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. 

3. துள்ளாத மனமும் துள்ளும், விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல் எனலாம். விஜய்யின்  ‘குட்டி’ என்ற கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பரவியது.படத்தில் விஜய் பாடல் பாடும், கேபிள் கனெக்‌ஷன் பையனாக வலம் வந்திருப்பார். இவரின் நடிப்பு சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்ததவை.

 4.  எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் குஷி. இந்த படத்தில் விஜக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோடு காதலர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் குஷி அமைந்தது.

 5. துப்பாக்கி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம். விஜய்யின் சினிமா கரியரில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாகும். துப்பாக்கி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படமாக அமைந்துள்ளது.

6. லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். கொரோனாவால், 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்திலும் திரையரங்குக்கு மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. பாக்ஸ் ஆபிஸுலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. 


விரைவில் இவரது 66வது திரைப்படமான வாரிசு வெளியாக உள்ளது. இதுபோன்ற தொடர் வெற்றிகளும், பாராட்டுகளும் பெற்று தளபதி விஜய் வெற்றிநாயகனாக வலம் வர வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க....Thalapathy Vijay Birthday : விஜய் பிறந்தநாள் கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து மழை!

click me!