
இன்று பிறந்தநாள் காணும் வளர்ந்து வரும் ஹீரோ தான் ஹரிஷ் கல்யாண். தனது 32வது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஹரிஷ் கல்யாணின் தந்தை "பைவ் ஸ்டார்" கல்யாண் ஒரு திரைப்பட விநியோகஸ்தர் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறுவயதில் இருந்தே தந்தையின் சினிமா வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்த ஹரிஷ் கல்யாண் கடந்த 2010ம் ஆண்டு சாமி என்ற இயக்குனரின் இயக்கத்தில் வெளியான "சிந்து சமவெளி" என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலக பிரவேசம் அடைந்தார்.
அன்று தொடங்கி இன்று வரை சுமார் 13 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் "ஓமனப்பெண்ணே" என்பதை நாம் அறிவோம்.
இதையும் படியுங்கள் : இஸ்லாமியர்களுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய நடிகை குஷ்பு
இன்று பிறந்தநாள் காணும் ஹரிஷ் கல்யாண் தனது லயன்-அப்பில் சுமார் ஐந்து திரைப்படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய நடிப்பில் தற்போது உருவாகி வரும் "டீசல்" திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது. அதேபோல ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, சுதன் சுந்தரம் தயாரிக்கும் "பார்க்கிங்" என்ற திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் நடிகை இந்துஜா மற்றும் பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்த இரு படங்கள் இல்லாமல் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி முதன்முதலில் தயாரித்து வழங்க இருக்கும் LGM திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரப்பர் பந்து, நூறுகோடி வானில் என்ற வேறு இரு படங்களிலும் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். இந்த 2023ம் ஆண்டில் இவருடைய நடிப்பில் ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளது, இவருடைய வெற்றி பாதைக்கு வித்திட்டுள்ளது என்றே கூறலாம்.
இதையும் படியுங்கள் : பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்! பிரபலங்கள் இரங்கல்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.