போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுத்த பிந்து...!!

 
Published : Aug 01, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுத்த பிந்து...!!

சுருக்கம்

bindhu punished the contestants

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பாதியில் உள்ளே வந்துள்ளவர் "கழுகு", "தேசிங்கு ராஜா" போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த பிந்து மாதவி.

இவர் உள்ளே வந்ததும் யாரை மிகவும் பிடிக்காது மற்றும் பிடிக்கும் என்பதை எழுத்துக்கள் மூலம் தெளிவு படுத்தினார். இதனை தொடர்ந்து அனைவருக்கும் தண்டனையையும் கொடுத்தார்.

எப்படி பட்ட போட்டிகள் வைத்து என்ன என்ன தண்டனை கொடுத்தார் தெரியுமா...? முதலாவதாக சக்தி மற்றும் காயத்ரியை அழைத்து தனக்கு ஒரு டீ போட்டு கொடுக்கும் படி கூறினார். காயத்ரி மற்றும் சக்தி ஆகிய இருவரும் இணைந்து டீ போட்டதில் காயத்ரி போட்ட டீ நன்றாக உள்ளது என்று பாராட்டி சுமாரான டீ போட்ட சக்திக்கு நீச்சல் குளத்தில் குதிக்க சொல்லி தணடனை கொடுத்தார்.

அடுத்தாத வையாபுரி, சினேகன், மற்றும் கணேஷ் ஆகியோருக்கு சேலை கட்டும் போட்டி வைத்தார் இதில் கடைசியாக சேலை கட்டிய சினேகனுக்கு நீச்சல் குளத்தில் விழும் தண்டனை கொடுக்கப்பட்டது.

அடுத்ததாக பிக் பாஸ் நடன ராணிகள் ஓவியா மற்றும் ஜூலிக்கு நடன போட்டி வைத்தார். இதில் இருவருமே நன்றாக ஆடியிருந்தும் பலர் ஜூலி நன்றாக ஆடினார் என்று கூறியதால் ஓவியாவுக்கு நீச்சல் குளத்தில் விழும் தண்டனை கொடுக்கப்பட்டது.

கடைசியாக ஆரவுக்கும் ரைசாவிற்கும், நீங்கள் குளத்தில் குதித்து விட்டு தண்னிடம் வரும் நபர்களுக்கு சாக்லேட் பரிசாக கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆரவ் கடைசியாக குதித்தாலும் முதலில் வந்து பிந்துவை பிடித்து பரிசை பெற்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!