
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது அப்படிதான் இந்த வாரம் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் வகையில் நடிகை பிந்து மாதவி போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
இவர் வந்த முதல் நாளே நாமினேஷன் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாவதாக வந்த பிந்து மாதவி சற்றும் யோசிக்காமல் ஜூலியின் பெயரை கூறி இவர் தன்னிடம் வந்து சரியாக பேசாதத்தால் இவருடைய பெயரை கூறுவதாகவும். அடுத்ததாக நடன இயக்குனர் காயத்ரி பெயரை கூறினார், இவர் தன்னிடம் இது வரை கோபப்பட்டதில்லை என்றாலும் இது வரை தான் பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் அதிகமாக கோபப்பட்டதால் இவருடைய பெயரை நாமினேட் செய்வதாக கூறினார்.
இதனை தொடர்ந்து வந்த போட்டியாளர்கள் தங்களுக்கு எந்த போட்டியாளர் வெளியேற வேண்டும் என கூறி அவர்களுடைய பெயரை கூறி நாமினேட் செய்தனர்.
இந்த வாரத்தில் அதிகமாக அனைவராலும் நாமினேட் செய்யப்பட்டவர்கள் ஓவியா மற்றும் ஜூலி, ஏற்கனவே பிக் பாஸ் விதியை மீறியதால் வையாபுரி நாமினேஷன் லிஸ்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த வாரம், தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தலைவராகி தீருவேன் என கூறி கொண்டிருந்த ஜூலியின் பெயர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளதால் இவரது தலைவர் பதிவுக்கான கனவு நொறுங்கியுள்ளது... அடுத்தவாரம் தலைவராக ஜூலி வருவற்கு மக்கள் அவருக்கு ஓட்டுகள் போட்டு பிக் பாஸ் வீட்டில் தங்கவைப்பார்களா பொறுத்திருந்து பாப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.