வடசென்னை தமிழைக் கடந்து கன்னடத்தில் கால்பதிக்கிறார் வெற்றிமாறன்

 
Published : Aug 01, 2017, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
வடசென்னை தமிழைக் கடந்து கன்னடத்தில் கால்பதிக்கிறார் வெற்றிமாறன்

சுருக்கம்

Vetrimaran goes to Kannada after North chennai movie

தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன். தற்போது நடிகர் தனுஷை வைத்து ‘வட சென்னை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து அவர் கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா மற்றும் பலா் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வட சென்னை’. வெற்றிமாறன் இயக்கிவரும் இப்படம் மூன்று பாகங்களாகத் தயாராகி வருகிறது. தற்போது, முதல் பாகம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது.

நடிகர் தனுஷ் தற்போது ‘விஐபி 2’ படத்தின் ப்ரமோஷனில் பிசியாக இருப்பதால், அவர் கால்ஷீட்டுக்காக ‘வட சென்னை’ படக்குழு காத்திருக்கிறதாம்.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கப் போவதாகத் தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்தின் கதையில் நான்கு பையன்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில் கொடூர போலீஸாக நடிக்கிறார் கிஷோர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவராகவும் அவா் உள்ளாா்.

இயக்குனர் வெற்றிமாறன் வட சென்னை படத்தில் பிஸியாக இருப்பதால் அவரே படத்தை இயக்குவாரா அல்லது வேறு யாராவது இந்தப் படத்தை இயக்கப் போகிறார்களா? என்ற முழுதகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!