போடுடா வெடிய... 'பிகில்' ட்ரைலர் தேதி அறிவிப்பு...! ஆரவாரம் செய்யும் தளபதி ரசிகர்கள்!

Published : Oct 07, 2019, 06:31 PM IST
போடுடா வெடிய... 'பிகில்' ட்ரைலர் தேதி அறிவிப்பு...! ஆரவாரம் செய்யும் தளபதி ரசிகர்கள்!

சுருக்கம்

'பிகில்' திரைப்படம் வெளியாவதற்குள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில், ட்விட்டரில் கூட அதிக லைக்குகளை பெற்று, 'பிகில்' பட போஸ்டர் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த சாதனையை செய்ய  பிகில் படம் தயாராகி உள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

'பிகில்' திரைப்படம் வெளியாவதற்குள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில், ட்விட்டரில் கூட அதிக லைக்குகளை பெற்று, 'பிகில்' பட போஸ்டர் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த சாதனையை செய்ய 'பிகில்' படம் தயாராகி உள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

அதாவது, இத்தனை நாள், விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, பிகில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை தற்போது வைரலாக்கும் முழு முயற்சியில் இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், அக்டோபர் 12 ஆம் தேதி, பிகில் பட ட்ரைலர் வெளியாக உள்ளதாக விஜய்யின் ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். 

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் கதிர், யோகிபாபு, மேயாத மான் சிந்துஜா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Bigg Boss 10 : பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? தீபாவளி-க்காக விஜய் சேதுபதி கொடுத்த செம ட்விஸ்ட்
Ravana Yash : அடேங்கப்பா... ராமாயணத்தில் 'ராவணன்' யஷ் அணிந்திருந்த 130 நகைகளின் எடை இத்தனை கிலோவா?