விஜய்க்கு எடப்பாடியார் வைக்கும் செக்!: கிலியில் ‘பிகில்’ டீம்

Published : Oct 07, 2019, 05:49 PM IST
விஜய்க்கு எடப்பாடியார் வைக்கும் செக்!:	கிலியில் ‘பிகில்’ டீம்

சுருக்கம்

தென்னிந்தியாவின் வித்தியாச நடிகர், இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் ‘பார்த்திபன்’.  சமீபத்தில் வெளியான அவரது ‘ஒத்த செருப்பு’ படம் பெரியளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. இந்தப் படத்தை பிரதமர் மோடிக்கு திரையிட்டுக் காட்டிட பெரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மனிதர். அது சாத்தியமாகாத பட்சத்தில், ஆந்திராவின் மாஜி முதல்வர் நாயுடுவுக்காவது போட்டுக் காட்ட நினைக்கிறாராம். இதிலும் வித்தியாசம்.   


* தென்னிந்தியாவின் வித்தியாச நடிகர், இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் ‘பார்த்திபன்’.  சமீபத்தில் வெளியான அவரது ‘ஒத்த செருப்பு’ படம் பெரியளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. இந்தப் படத்தை பிரதமர் மோடிக்கு திரையிட்டுக் காட்டிட பெரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மனிதர். அது சாத்தியமாகாத பட்சத்தில், ஆந்திராவின் மாஜி முதல்வர் நாயுடுவுக்காவது போட்டுக் காட்ட நினைக்கிறாராம். இதிலும் வித்தியாசம். 

* துவக்க காலத்தில் தனக்கு கைகொடுத்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு பட வாய்ப்பை கொடுத்து கெத்து இயக்குநராக்கி அடையாளம்  கொடுத்துவிடுகிறார் விஜய் சேதுபதி. ஆனால் இந்த பட்டியல் நீள்வதால், சமீபத்தில் தன் சிஸ்டத்தை மாற்றியுள்ளார். அதன்படி ‘கால்ஷீட் இல்லை. வேணும்னா நான் நடிக்கிற படத்துல ஒரு கேரக்டர் தர்றேன். அதை அப்படியே பிக் அப் பண்ணிக்கோங்க.’ என்கிறாராம். 

*    இம்மாத இறுதியில் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது ‘பிகில்’ திரைப்படம். ஆனால் இன்னமும் சென்சாருக்குப் போகவில்லை.  கடைசி நேரத்தில் கெத்தாக காட்டி வாங்கிக்கலாம்!என்பது விஜய் மற்றும் இயக்குநரின் நினைப்பு. ஆனால் சென்சாருக்கு வருகையில் இழுத்தடித்து, விஜய்யை தங்களிடம் மண்டியிட வைத்து, சமீபத்தில் அவர் அரசுக்கு எதிராக பேசியதற்கு பழி எடுக்க வேண்டும் என்று முடிவில் இருக்கிறதாம் அதிகார தரப்பு ஒன்று. 

* அசுரன் படத்தில் தன் நடிப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பானது, தனுஷை சிலிர்க்க வைத்துள்ளது. இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் கேங்ஸ்டர் டைப் படத்துக்காக லண்டனில் இருப்பவர், தமிழ்நாட்டுக்கு வந்து, தன் ரசிகர்களோடு அந்தப் படத்தை ஒரு தடவை பார்த்துவிட வேண்டும்! என்று துடிக்கிறாராம். 

* ரஜினி, ரஹ்மான், ஷங்கர், எமி என்று பெரிய காம்போ இருந்தும் கூட 2.0 படம் செம்ம சொதப்பலாகியது. எனவே இந்தியன் 2 படத்தை எப்படியாவது ஹிட்டடிக்கும் நோக்கில் துவக்கிய ஷங்கருக்கு, இடையில் படம் தடைபட்டது பெரிய எரிச்சலை தந்துள்ளது. இப்போது படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ள நிலையில், தாறுமாறாக ஹிட்டடிக்க வைக்கும் நோக்கில் ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கிக் கொண்டிருக்கிறாராம் மனிதர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!