பிகில் சூப்பர் ஹிட்... பொய்த்துப்போன பிரபல டுபாக்கூர் ஜோதிடரின் ஜாதகம்..!

Published : Oct 25, 2019, 02:09 PM IST
பிகில் சூப்பர் ஹிட்... பொய்த்துப்போன பிரபல டுபாக்கூர் ஜோதிடரின் ஜாதகம்..!

சுருக்கம்

'பிகில்’படம் துப்பாக்கி, கத்தி படங்கள் போல் மாபெரும் வெற்றி அடையும் என ஜாதகத்தை வைத்து கணித்து இருந்தார் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன்.  அது இப்போது பொய்த்து போயிருக்கிறது. 

 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பாக ஒரு சில கணிப்புகளை சரியாக வெளியிட்டதால் வெளிச்சத்துக்கு வந்த பாலாஜி ஹாசனின் சமீபத்திய இம்சைகள் எல்லை மீறிப்போய்க்கொண்டு இருக்கின்றன. அதன் உச்சமாக  விஜய், அட்லி, நயன் ஆகிய மூவரின் ஜாதகங்களை வைத்து கணித்திருந்தார் பாலாஜி ஹாசன். விஜய் படம் ஹிட்டோ இல்லையோ அது ஹிட்டாகவே காண்பிக்கப்படும் என்ற சாதாரண உண்மை பாலாஜி அறியாததல்ல. நயன் ஜாதகமெல்லாம் எங்கிருந்து இவருக்கு கிடைத்ததோ..? 

இது குறித்து  தனது யூடியுப் பதிவில் கடந்த சில நாட்களுக்கு முன், ‘’தற்போது இப்போது மாறுகின்ற குரு விஜய்யின் ராசிக்கு, யோகாதிபதி ஸ்தானம் என கூறக்கூடிய லாபாதிபதி ஸ்தானத்தை தான் பார்க்கிறார். எனவே கண்டிப்பாக அவருக்கு வெற்றி. அதேபோல் அட்லியின் விக்கிபீடியாவில் கிடைத்த பிறந்த தேதியை வைத்து பார்த்தால், அவருக்கும் யோக ஸ்தானத்திலும்,  ஏழாவது இடத்திலும் சம சப்தம பார்வை பார்க்கிறார்.  ஏழாம் இடம் குருவுக்கு பலம் அதிகம் எனவே அவருடைய வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்து இருந்தார்.

 

 நடிகை நயன்தாராவை பொறுத்தவரை அவருடைய ராசிக்கு, பட சுக்கிரன் இடத்தையும்,  வெற்றியை கொடுக்கக்கூடிய ஆறாம் இடத்தை சனியும் குருவும் ஒரு சேர பார்ப்பது கூடுதல் சிறப்பு.  எனவே இந்தப்படம் ’துப்பாக்கி’,’கத்தி’ போன்ற படங்களுக்கு இணையாக மிகப்பெரிய வெற்றியை தரும் என கூறி இருந்தார்.  ஆனால் தற்போது பிகில் படம் வெளியாகி படுதோல்வியை அடைந்துள்ளது. ஆக மொத்தத்தில் பாலாஜி ஹாஸனின் ஜாதக கணிப்பு தவறி உள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?