அடேய்... அட்லி , என்னா பேச்சு, என்னா ஸ்டைலு..? தலைவன சாச்சிபுட்டியே...!! இதுக்கா இந்த பந்தா.? கொதித்து குமுறி அழும் வெறித்தன ரசிகர்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2019, 1:14 PM IST
Highlights

படத்தின் இயக்குநரான அட்லீ கதையில கவனம் செலுத்தவே இல்லைன்னு, அறிவில்லாத அட்லீ பல படங்களில் இருந்து காட்சியை சுட்டு படத்தை எடுக்க முடியாம அரைகுறையா முடிச்சியிருக்கிறதாகவும் ரசிகர்கள் கொலைவெறியில கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. எது எப்படியோ பல சர்ச்சைகளோட வெளியான பிகில் திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணாமல் ரசிகர்களை வெறியேற்றி இருக்கிறது. 

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து,ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான பிகில் திரைப்படம் சமூக வலைத்தளங்களில் படுமோசமான கமெண்ட்களை வாங்கி வருகிறது. அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கான ஆடியோ லாஞ்ச் புரோகிராம், செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் எதிர்பார்த்தது போலவே அரசியல் பேசி அனைவரையும் தெறிக்க விட்டார் விஜய். பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் அடித்தவர், லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதற்கு மிகுந்த ஆதங்கம் தெரிவித்தார். அரசியலில் புகுந்து விளையாடுங்க ஆனா, அரசியல் பார்க்காதீங்கன்னு ரசிகர்களுக்கு தடாலடி அறிவுரை கூறிய விஜய்,  சுபஸ்ரீ விவகாரத்தில் யாரை எங்க உட்கார வைக்கனுமோ, அவங்களை அங்க உட்கார வச்சா நல்லா இருக்கும் என கருத்து தெரிவிக்க ரசிகர்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. 

இதுபோதாத விஜய், அரசுடன் ஆடுபுலி ஆட்டம் ஆட. ஒரு பக்கம் விஜய் பேசிய வீடியோ காட்சிகளை அவர்களது ரசிகர்கள் வேற லெவலுக்கு வைரலாக்கிக் கொண்டிருக்க, பிகில் படத்திற்கான சர்ச்சைகளும் வரிசைகட்டி வர ஆரம்பித்தன. விஜய்யின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவுகரம் நீட்ட, வழக்கம் போல ஆளுங்கட்சி தரப்பில் இருந்து விமர்சனங்கள் குவியத் தொடங்கியது .இது கண்டிப்பா, பிகில் படத்திற்கு பிரச்னையாக அமையும் என விஜய் ரசிகர்கள் யுகித்த நேரத்தில், பிகில் பட கதை என்னுதுன்னு உதவி இயக்குநர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒருவழியாக பிரச்னைகளை சமாளித்த பிகில் படக்குழு அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் தேதியை அறிவித்தது.ஆனால் கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதையாக பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ  அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் பட்டாளமும், தயாரிப்பு தரப்பும்  ஆடிப்போனது. இதனிடையே மெர்சல் பட சர்ச்சையின் போது விஜய், முதலமைச்சரை நேரில் சந்தித்தை நினைவு கூறும் படி இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாகின. 

டிக்கெட் விலை அதிகம் விக்கிறாங்க அதனால் தான் தடை போட்டோம் என அரசு தரப்பு தடாலடி காட்ட, அப்படின்னா டிக்கெட்ட அநியாய விலைக்கு விற்கமாட்டோம் என சரண்டர் ஆனது பிகில் படக்குழு.ஒருவழியா சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு, ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளுடன் இன்று வெளியானது பிகில் திரைப்படம். சிறப்பு காட்சிக்காக இரவு முதலே காத்திருந்த விஜய் ரசிகர்கள் படத்தை திரையிட தாமதம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடித்து ஆராவாரமா படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஏன்னா,  மேடையில் விஜய் பேசின அரசியலை, திரையில் எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

 

படத்தோட முதல் பாதி நல்லவே இல்லைன்னு, ஒரே காட்சிகள் திரும்ப, திரும்ப வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் படுமோசமான விமர்சனங்கள் உலா வருது. மேலும் படத்தின் இயக்குநரான அட்லீ கதையில கவனம் செலுத்தவே இல்லைன்னு, அறிவில்லாத அட்லீ பல படங்களில் இருந்து காட்சியை சுட்டு படத்தை எடுக்க முடியாம அரைகுறையா முடிச்சியிருக்கிறதாகவும் ரசிகர்கள் கொலைவெறியில கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. எது எப்படியோ பல சர்ச்சைகளோட வெளியான பிகில் திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணாமல் ரசிகர்களை வெறியேற்றி இருக்கிறது. இசை வெளியிட்டு விழாவில் அட்லி பேசியதை மேற்கோள்காட்டியுள்ள ரசிகர்கள் இதுக்கா இவ்வளவு பந்தா காட்டுனனு அட்லியை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

click me!