கார்த்தியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் கைதி படம் படு சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதே நேரத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு முன்னிட்டு நடிகர் கார்த்தியின் நடிப்பில் 'கைதி' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமிழில் முதல்முறையாக நடிக்கும் நடிகை ராஷ்மிக்கா நந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படம் முழுவதும் இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகிய 'கைதி' ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் கார்த்தியின் நடிப்பில் இந்த படம் மற்றுமொரு மைல்கல் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் பிகில் படம் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த பிகில் படம் பெருத்த ஏமாற்றத்தை தந்திருப்பதாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாக்ஸ் ஆபீஸிலும் பிகில் படத்தை தாறுமாறாக விமர்சித்திருக்கின்றனர். 10 ஆண்டுகளில் மோசமான படம் என்றும், எனவே நேரத்தை வீணடிக்காமல் தீபாவளியை கொண்டாடுங்கள் என்றும் விமர்சித்துள்ளனர். ரேட்டிங்கும் 1.5 அளவில் தான் வழங்கப்பட்டிருக்கிறது. கடுமையான எதிர்ப்பிற்கிடையே வெளியாகிய பிகில் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இயக்குனர் அட்லீயை சமூக வலைத்தளங்களில் கடுமையாக அர்ச்சித்து வருகின்றனர்.
ஆகவே இந்த தீபாவளி கார்த்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும், விஜய் ரசிகர்களுக்கு சோகத்தையும் கொடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்..! இந்தியா பார்த்திராத மிக கொடூரம் அது..!