
பல சர்ச்சைகளைத் தாண்டி நடிகர் விஜய்யின் திகில் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் மற்றும் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகியுள்ளது. திகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசை விமர்சித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது, அதைத்தொடர்ந்து பல நெருக்கடிகளை பிகில் திரைப்படம் சந்தித்து வந்ததுடன், படம் வெளியாகுமா ஆகாதா என்ற சூழலில் சிக்கி பின்னர் ஒருவழியாக இன்று திரைக்கு வந்துள்ளது.
ஆனாலும் தீபாவளி பண்டிகைக்கு வெளிவரும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திடீரென பிகில் திரைப்படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் படக்குழுவினர் அரசுக்கு கோரிக்கை வைத்தது தொடர்ந்து ரிலீஸாகும் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பிகில் திரைப் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வெளியான பிகில் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆடல் பாடலுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்து படத்தை பார்த்து ரசித்துவருகின்றனர்.
கடுமையான சோதனைகளைத்தாண்டி பிகில் திரைக்கு வந்துள்ளநிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர். இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை வைத்து அவரது படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. என்றும் இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் விஜய்தான், அதனால்தான் அவரைப் பார்த்து அரசு பயப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.