’பிகில்’ஆடியோ சர்ச்சை...சன் டி.வி.யில் விஜய்யின் பேச்சை வெட்டச்சொன்னது இவர்தான்...

Published : Sep 23, 2019, 04:52 PM IST
’பிகில்’ஆடியோ சர்ச்சை...சன் டி.வி.யில் விஜய்யின் பேச்சை வெட்டச்சொன்னது இவர்தான்...

சுருக்கம்

இந்நிலையில் நேற்று ‘பிகில்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சன் தொலைக்காட்சி நடிகர் விஜய்யின் பேச்சை ஒளிபரப்பும்போது மறைந்த சுபஸ்ரீயின் பேனர் விவகாரத்தில் விஜய் பேசியதை அப்படியே வெட்டி எறிந்தது. அடுத்து ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அட்டாக் பண்ணும் ‘யாரை எங்க வைக்கணுமோ’வில் பாதியை வெட்டி எறிந்தது.

விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள் ஒவ்வொரு திசையாக கிளைவிட்டுப் படர்ந்துகொண்டிருக்கும் நிலையில், புதிய சர்ச்சை ஒன்று சன்.டி.வியின் ரூபத்தில் கிளம்பியுள்ளது. நிகழ்ச்சி நடந்து மூன்றே நாட்களில் சுடச்சுட அதை வெளியிட்ட சன் டி.வி., அதில் விஜய் பேசிய சில சென்சிடிவான விஷயங்களுக்கு கத்தரி போட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் செம காண்டாகியுள்ளனர்.

’பிகில்’ இசை விழா முடிந்த அடுத்த நாளே நடிகர் விஜய் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தாலும் அவர் பேசி விட்டுச் சென்ற கருத்துக்களுக்கு அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ‘பிகில்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சன் தொலைக்காட்சி நடிகர் விஜய்யின் பேச்சை ஒளிபரப்பும்போது மறைந்த சுபஸ்ரீயின் பேனர் விவகாரத்தில் விஜய் பேசியதை அப்படியே வெட்டி எறிந்தது. அடுத்து ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அட்டாக் பண்ணும் ‘யாரை எங்க வைக்கணுமோ’வில் பாதியை வெட்டி எறிந்தது.

இதை இன்று வலைதளங்களில் பரப்பி சன் டி.விக்கு எதிராகப் பொங்கிவரும் விஜய் ரசிகர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சமாச்சாரம் ஒன்றே ஒன்றுதான். ‘மெர்சல்’பட ரிலீஸ் சமயத்துல நடந்ததெல்லாம் மறந்துபோச்சா தம்பி? ‘பிகில்’பட ரிலீஸ் எங்க தயவு இல்லாம நடந்துடுமா?? என்று அதிமுக அமைச்சர்கள் வெளிப்படையாக மிரட்டியதை ஒட்டி படத்தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனாவும் நடிகர் விஜய்யும் இணைந்தே அந்த பகுதிகளை வெட்டும் முடிவை எடுத்திருக்கிறார்கள். பாவம் அவங்களுக்கு பசிக்கும் இல்லையா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa