அல்டிமேட்னு சொல்லி ஆப்பு வச்சுட்டீங்களே பிக்பாஸ்... டைட்டில் ஜெயிச்ச பாலாவுக்கு இவ்வளவு தான் பரிசுத் தொகையா?

Published : Apr 11, 2022, 01:48 PM IST
அல்டிமேட்னு சொல்லி ஆப்பு வச்சுட்டீங்களே பிக்பாஸ்... டைட்டில் ஜெயிச்ச பாலாவுக்கு இவ்வளவு தான் பரிசுத் தொகையா?

சுருக்கம்

BiggBoss Ultimate : பிக்பாஸ் 4-வது சீசனில் இறுதிப்போட்டி வரை வந்த பாலா நூழிலையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். ஆனால் இம்முறை டைட்டிலை வென்று அசத்தி உள்ளார்.

தமிழில் முதன்முறையாக நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. 70 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்பட்டது. முதல் 3 வாரம் கமலும், அதன்பின்னர் சிம்புவும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியின் இறுதிபோட்டிக்கு 4 பேர் மட்டுமே தேர்வாகினர். தாமரை, நிரூப், ரம்யா பாண்டியன், பாலா ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போட்டி போட்டனர். இதில் தாமரைச் செல்விக்கு 4-வது இடமும், ரம்யா பாண்டியனுக்கு 3-வது இடமும் கிடைத்தது. இறுதியில் பாலா மற்றும் நிரூப் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

அதில் அதிக வாக்குகளை பெற்றதன் காரணமாக பாலா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த முறை பிக்பாஸ் 4-வது சீசனிலும் இறுதிப்போட்டி வரை வந்த பாலா நூழிலையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். ஆனால் இம்முறை டைட்டிலை வென்று அசத்தி உள்ளார் பாலா. அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிக்பாஸ் டைட்டிலை வென்ற பாலாவுக்கு டிராபியும், ரூ.35 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. வழக்கமாக தொலைக்காட்சிக்காக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஆனால் இது அதைவிட குறைந்த நாட்களே நடத்தப்படுவதால் குறைவான பரிசுத்தொகை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... Jersey movie : பயம் காட்டிய KGF 2... கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஜெர்ஸி - ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!