BiggBoss Tamil5 Promo : தாமரைக்கு கை கொடுத்த கிராம வாழ்க்கை ..வெற்றியடைய சாணத்தில் புரளும் போட்டியாளர்கள்

Kanmani P   | Asianet News
Published : Dec 16, 2021, 05:10 PM IST
BiggBoss Tamil5 Promo : தாமரைக்கு கை கொடுத்த கிராம வாழ்க்கை ..வெற்றியடைய சாணத்தில் புரளும் போட்டியாளர்கள்

சுருக்கம்

BiggBoss Tamil5 Promo : சாணத்தில் போடப்பட்டுள்ள காயின்களை தொட்டிக்குள் இறங்கி சேகரிக்க வேண்டும் என்னும் டாஸ்கில்  வெற்றி பெற ஹவுஸ் சாணத்தில் புரளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சங், சின்ன பாப்பா, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபிஷேக்,இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இதுவரை எலிமினேட் ஆகி உள்ளனர். 

நாமினேஷனில் இருந்து போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, பஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில்  நிரூப் வெற்றியடைந்தார்.  இதையடுத்து,நாமினேஷனிலிருந்து தப்பிக்க பகடை டாஸ் கொடுக்கப்பட்டது. அதில், பகடைக்காய் போன்ற செட் அப்பில் பிக் பாஸ் போட்டியாளர்களில் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. மூன்று முறை பெல் அடித்து முடிக்கும்போது யாருடைய புகைப்படம் வானத்தைப் பார்த்து இருக்கிறதோ, அவரை அந்த பகடைக்காயில் இருந்து கீழே தள்ளிவிட வேண்டும்.

அப்போது நடுவராக இருந்த பிரியங்கா அக்ஷரா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் கண்டபடி ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.

இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், ஒரு தொட்டியில் மாட்டு சாணம் கலந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சாணத்தில் உள்ள காயினை போட்டியாளர்கள் தேடி கண்டுபிடித்து எடுக்க வேண்டும். அந்த டாஸ்கில் தாமரை, அமீர், அபிநய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாணியில் நாணயத்தை தேடி கடுப்பான அமீர், போதும் பிக் பாஸ் வேண்டாம் என்று கெஞ்சுகிறார். ஆனால் தாமரை கிராமத்து பெண் என்பதால் குஷியாக இந்த போட்டியை முடிக்கிறார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?