ஓவர் ஆக்ஷன் செய்யதாரா செரீனா.? தூக்கி கொண்டு ஓடிய அசீம்..! ஒரேயடியாய் சோளியை முடித்த பிக்பாஸ்!

Published : Oct 27, 2022, 06:45 PM IST
ஓவர் ஆக்ஷன் செய்யதாரா செரீனா.? தூக்கி கொண்டு ஓடிய அசீம்..! ஒரேயடியாய் சோளியை முடித்த பிக்பாஸ்!

சுருக்கம்

பிக்பாஸ் போட்டியில் தற்போது பொடியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 'நீயும் பொம்மை நானும் பொம்மை' டாஸ்கால் பல பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், செரீனாவுக்கு உடல் நிலை சரியாமல் போக, ஒரேயடியாய் அவரை பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ள வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வாரத்தை எட்டுவதற்குள்ளேயே பல பிரச்சினைகள், சண்டைகள், என கலை கட்டி வருகிறது. மேலும் அவ்வபோது அசல் கோளாறு செய்யும் காதல் லீலைகளும் நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனையில்... எண்ணெய் ஊற்றி தீ மூட்டுவது போல கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க் தான் 'நீயும் பொம்மை நானும் பொம்மை'.

ஏற்கனவே இந்த டாஸ்கால் பல பிரச்சினைகள் பிக் பாஸ் வீட்டில் உருவான நிலையில், தற்போது  செரீனாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மூச்சு திணறலால் டால் ஹவுஸ் உள்ளேயே அவர் மூச்சு திணறி கீழே விழுந்து அழுது கொண்டிருக்கிறார். அவரை அசீம் வீட்டிற்குள் தூக்கி செல்ல, மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் முதலுதவி கொடுக்கின்றனர்.

பின்னர் பிக்பாஸ் செரீனாவை மருத்துவ அறைக்கு கொண்டுவர சொல்கிறார். மேலும் விக்ரமன் உடல்நிலை முடியாதவர்கள் ஏன் இந்த விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என கூறியதற்கு மாற்ற போட்டியாளர்கள் அவரை சண்டை போடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. உடல்நிலை சரியாகிய பின்னர் செரினாவிடம் பேசும் பிக்பாஸ் உங்களால் இந்த போட்டியை ஈடு கொடுத்து விளையாட முடியாததால், இந்த போட்டியில் இருந்து அவர் விளக்கப்படுவதாக கூறி ஒரேடியாக சோளியை முடித்து விட்டார்.

மேலும் செரினாவின் மூச்சு திணறலை பார்த்து நெட்டிடங்கள் பலரும், அவர் பயங்கரமாக பர்பாமென்ஸ் செய்கிறார் என கூறி வருகிறார்கள். இது குறித்த வீடியோக்கள் தான் வைரலாகி வருகிறது.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?