raja rani 2 : வீட்டுக்கு போவதிலும் சிக்கலா? இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Published : Oct 27, 2022, 06:10 PM IST
 raja rani 2 : வீட்டுக்கு போவதிலும் சிக்கலா? இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

சுருக்கம்

சரவணன் மட்டும் கொஞ்சம் வருத்தப்பட சந்தியா நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என கூறுகிறார்.இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தற்போது சோகமாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் சந்தியா கௌரி மேடம் சந்திகேகின்றனர். அப்போது மேடம் நான் வீட்டுக்கு கிளம்புகிறேன். வீட்டில் சொல்லி இருக்கேன் அவங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க எனக்கூறுகிறார்கள். அதற்கு கௌரி மேடம், முதல்ல இதை என்கிட்ட சொல்லி இருக்கணும் நீங்க கர்ப்பமாக இருந்தால் கூட அவ்வளவு சீக்கிரமாக போயிட முடியாது. ஃபார்மாலிட்டிஸ் இருக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கொடுக்கணும் அதற்கான வேலையை போய் பாருங்க என சொல்லி அனுப்பி விடுகிறார்.

சந்தியா மெடிக்கல் டெஸ்ட் எடுகிறார். அங்குள்ளவர்கள் மேல் அதிகாரிக்கு ரிசல்ட் அனுப்பப்படும் என கூறுகிறார். இந்த பக்கம் அர்ச்சனா குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறார். அங்கு வரும் செந்தில் குழந்தையை கொஞ்சி விட்டு இதுவே பெண்ணாக இருந்திருந்தால் குடும்பமே கொண்டாடி இருக்கும் என கூறுகிறார். செந்தில் வெளியே போனதும் டேய் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு பிறந்த பையா.. நான் ஒரு திட்டம் போட்டேன் ஆனா அது இப்படி போகிடுச்சு.. சரி விடு உன்னை வைத்து சொத்தில் பாதி எழுதி வாங்கிடுறேன்னு சொல்லுகிறார். 

மேலும் செய்திகளுக்கு...baakiyalakshmi : நல்ல சோறு கிடைக்காமல் ஏங்கும் கோபி..பாக்கிய லட்சுமி இன்றைய எபிசோட்

பின்னர் சரவணன் சிவகாமி என எல்லோரும் சந்தியாவை கூட்டிட்டு வர சென்னைக்கு கிளம்பி சென்ற நிலையில், அர்ச்சனாவுக்கு அவரது அம்மாவிடமிருந்து போன் வருகிறது. சந்தியா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார்.  அவருடைய அம்மா நான் ஒரு ஜோசியரை பார்த்திருந்தேன் அவர் உன்னுடைய பொண்ணுக்கு கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும் என்று சொன்னார். ஆனால் பயன் பிறந்துட்டான் என சொல்ல அர்ச்சனா மழுப்பி விடுகிறார். பிறகு சிவகாமி, சரவணன் மற்றும் அவருடைய அப்பா என மூவரும் வந்து சந்தியாவை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். சரவணன் மட்டும் கொஞ்சம் வருத்தப்பட சந்தியா நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என கூறுகிறார்.இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!