baakiyalakshmi : நல்ல சோறு கிடைக்காமல் ஏங்கும் கோபி..பாக்கிய லட்சுமி இன்றைய எபிசோட்

Published : Oct 27, 2022, 05:52 PM ISTUpdated : Oct 27, 2022, 06:10 PM IST
 baakiyalakshmi : நல்ல சோறு கிடைக்காமல் ஏங்கும் கோபி..பாக்கிய லட்சுமி இன்றைய எபிசோட்

சுருக்கம்

ராதிகா வர இருவரும் பிரியாணி என்று ஆவலுடன் சாப்பிட போன இடத்தில் ராதிகா எதையோ பௌலில் போட்டு கொடுக்க அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க வர்ஷினி எழிலிடம் சென்று அவரை காதலிப்பதாக சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார். பின்னர் நான் அமிர்தாவை காதலிக்கிறேன் என கூறுகிறார் எழில். ஆனால் வர்ஷினி அவங்க கல்யாணம் ஆகி அவருடைய கணவர் இறந்துட்டாங்க அவங்கள விடுங்க எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு நீங்க என்ன சொல்றீங்க என கேட்கிறார். எழில் சாரிங்க என்ன சொல்லிவிடுகிறார். இதனால் வர்ஷினி கோபமாகி எழுந்து சென்று விடுகிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் கோபியை ராதிகா கண்டுகொள்ளாமல் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். கோபி ராதிகாவிடம் காபி கேட்க நினைக்க கடைசி வரை அவரால் கேட்க முடியாமல் போகிறது. அடுத்து போன் பேசி முடித்து விட்டு வரும் ராதிகா காபி குடிச்சா நல்லா இருக்கும்னு தோணுது என கூற எனக்கும் தான் என்கிறார் கோபி..அப்படின்னா ஆர்டர் பண்ணி இருக்கலாம் இல்ல எனக்கு கூறுகிறார் ராதிகா.

மேலும் செய்திகளுக்கு.. bharathi kannamma : உண்மையை உடைத்த கண்ணம்மா ...அதிர்ந்து போன வெண்பா..இன்றைய எபிசோட்

பிறகு மயூ வந்து எனக்கு ஒரு சம்மில் சந்தேகம் இருக்கு என கூற ராதிகா நான் பிஸியாக இருக்கிறேன். கோபி அங்கிள் கிட்ட கேளு எனக் கூறுகிறார். பசியோடு சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறார் கோபி. அப்போது தனக்கு லைட்டா பசிக்கிறது எனக் கூற எனக்கும் பசிக்கிறது எனக் கூறுகிறார் கோபி. 

இந்த பக்கம் பாக்கிய கல்யாண ஆர்டர் கிடைத்ததற்காக வீட்டில் எல்லோருக்கும் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 என விதவிதமாக சமைத்துக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறார். பிறகு வேலையை முடித்துவிட்டு வரும் ராதிகாவிடம் இருவரும் பசிக்குது என சொல்ல ஏன் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க ஏதாச்சும் ஆர்டர் பண்ணி இருக்கலாமே என சொல்ல,, கோபி ஏதாவது ஸ்பெஷலா பண்ணி இருப்பேன்னு நினைச்சேன் என கூறுகிறார்.

அப்படியா ஒரு 10 மினிட்ஸ் என கிச்சனுக்கு போகும் ராதிகா எதையோ சமைக்க தொடங்க பாக்யா வீட்டிலிருந்து பிரியாணி வாசனை வர கோபி இங்கிருந்துதான் வருகிறது உங்க அம்மா நமக்காக பிரியாணி செய்கிறாய் இன்றைக்கு ஒரு கட்டு கட்டிடலாம் என கோபி மயூவிடம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்க பிறகு ராதிகா வர இருவரும் பிரியாணி என்று ஆவலுடன் சாப்பிட போன இடத்தில் ராதிகா எதையோ பௌலில் போட்டு கொடுக்க அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!