
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டி வரை வந்த, அனைத்து போட்டியாளர்களிடமும் தொகுப்பாளர் கமல்ஹாசன் வெளியில் சென்றதும் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பியபோது, ரியோ என்ன சொன்னாரோ அதையே தற்போது செய்து காட்டியுள்ளார்.
சமீபத்தில் பரபரப்புகளுக்கும், விறுவிறுப்புகளுக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி . இதில் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற ஐந்து பேர்களிடம் கமல்ஹாசன் வெளியே சென்றதும் நீங்கள் முதலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்கிற கேள்வியை எழுப்பினார்.
அப்போது ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை கூறிய நிலையில் ரியோ ராஜ் ,வெளியே சென்றதும் வண்டியை எடுத்துக்கொண்டு ஏதாவது காட்டு பகுதிக்கு டிரக்கிங் சென்று, நிம்மதியாக இயற்கையின் அழகை ரசிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ரியோவை ஊக்குவிக்கும் விதமாக, நடிகர் கமலஹாசனும், டிரெக்கிங் செல்லும் போது இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறி டென்ட் ஒன்றை பரிசாக வழங்கி அவரை அசரவைத்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் சில நாட்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக பொழுதை கழித்த ரியோ ராஜ், தற்போது காட்டு பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றுள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்... இதற்க்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.