மனிதன் போட்ட கணக்கு பிழையானதோ... பிக்பாஸ் கேப்ரில்லா நடிக்கும் 'ஈரமான ரோஜாவே' ப்ரோமோ வெளியானது!

Published : Dec 26, 2021, 05:58 PM IST
மனிதன் போட்ட கணக்கு பிழையானதோ... பிக்பாஸ் கேப்ரில்லா நடிக்கும் 'ஈரமான ரோஜாவே' ப்ரோமோ வெளியானது!

சுருக்கம்

பிக்பாஸ் கேப்ரில்லாவுக்கு (Biggboss gabriella) வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் கேப்ரில்லாவுக்கு வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

குழந்தையோ நட்சத்திரமாக சீரியலில் நடிக்க துவங்க, பின்னர் திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கேப்ரில்லா. தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான, 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் மெச்சூர்டான வேடங்களுக்கு அடிபோட்டு வந்த கேபிக்கு அப்படி எதுவும் வாய்ப்புகள் கிடைக்காததால்,  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு  போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

அர்ச்சனாவின் அன்பு கேங்கில் செல்லக்குட்டியாக வலம் வந்த கேபி, கடைசியில் ரியோ 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு செல்வதை தடுப்பதற்காக, ரூ.5 லட்சம் பணத்தை தான் எடுத்து கொண்டு வெளியேறுவதாக கூறி ஷாக் கொடுத்தார். இவரை மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் மல்க வெளியேறியது ரசிகர்கள் மனதை உருக வைத்தது. இதை தொடர்ந்து விஜய் டிவியின் பிணைப்பை விட்டு பிரிய மனம் இல்லாத கேபி முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுநர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

பின்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில், ஆஜித்துடன் சேர்ந்து நடனமாடினார். எப்படியும் வெள்ளித்திரை வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக, விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த கேபி... விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டான சீரியல்களில் ஒன்றான, 'ஈரமான ரோஜாவே' சீரியலின் 2 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது விரைவில் 'ஈரமான ரோஜாவே சீரியலின் 2 ஆம் பாகம், விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதன் புரோமோ வெளியாகியுள்ளது.

காதலனை திருமணம் செய்து கொள்ளாமல் விதியின் வசத்தால், எப்படி கேப்ரில்லா... மற்றொருவரை திருமணம் செய்கிறார். அந்த சூழல் எப்படி உருவாகிறது, என்பதை ஒற்றை புரோமோவில் வெளிப்படுத்தியுள்ளனர். அந்த புரோமோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்