BiggBoss Anitha Sampath : செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடிகையாக உயர்ந்துள்ள அனிதாவின் ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது.
செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், தன் அழகிய தமிழ் உச்சரிப்பால் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இவர் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் தான் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் பிசியாக நடிக்கத்தொடங்கிய அனிதா சம்பத், கடந்த சில மாதங்களுக்கு சிம்பு தொகுத்து வழங்கிய் பிக்பாஸ் அல்டிமேட் எனும் ஓடிடி-க்கான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பின்னர் பாதியிலேயே எலிமினேட் ஆனார் அனிதா.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தான் கட்டி வந்த புது வீட்டுக்கு கிரஹபிரவேசம் நடத்திய அனிதா சம்பத். இந்நிலையில், தற்போது தனது யூடியூப் பக்கத்தில் தனது வீட்டை சுற்றிக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அனிதா. இந்த வீடு குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... “காதலை தவிர கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு”... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் உருக்கமான பதிவு...!
அதில் அவர் கூறியிருப்பதாவது : “ஹவுஸிங் போர்ட் குவாட்ரஸ் அனிதாவா, 5 வீட்டுக்கு ஒரு பாத்ரூம்னு இருக்கும் காலனில வாழ்ந்து பழகுன அனிதாவா, வாடகை குடுக்க முடியாம வீட்ட காலி பண்ணிட்டு காலேஜ் பார்ம்ல வீட்டு அட்ரஸ் என்ன எழுதுறது தெரியாம அழுத அனிதாவா, கால்ல ஓட்ட விழுந்த தேஞ்ச செருப்பு போட்டுக்கிட்டு கொதிக்கிற ரோட்டுல டூஷன் எடுக்க நடந்து போன அனிதாவா இருந்த நானும்.
ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாவா, ஓட்டு வீட்டு மேல ஏறி உட்கார்ந்து தரைய பார்த்து நாமளும் மாடி வச்ச வீட்டுக்கு வாடகைக்காவது போக மாட்டோமானு ஏங்குன பிரபாவா இருந்த என்னவனும், நிறைய தடைகளையும் வலிகளையும் கனவுகளையும் சுமந்து, வாழ்க்கையில எதிர்நீச்சல் போட்டு , "நேர்மையா" சம்பாதிச்ச காசுல கட்டுன எங்க கனவு இல்லம்.
இது வீடு இல்ல! இது எங்க முதல் குழந்தை. கிரகப்பிரவேசத்துக்கு எல்லாரையும் கூப்பிட முடில.இப்ப எங்க சிறிய வீட்டை உங்களுக்கும் காட்டுறோம். ஆசீர்வாதம் பண்ணுங்க. எங்கள மாதிரியே நீங்க எல்லாருமே சீக்கிரம் உங்க கனவு இல்லத்த வாங்குவீங்க” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் அனிதா. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Bigg Boss Anitha sampath :நீண்டநாள் கனவு நனவாகிடுச்சு.. குட்நியூஸ் சொன்ன அனிதா சம்பத் - குவியும் வாழ்த்துக்கள்