பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறிய போட்டியாளர் ஜனனி, மன்னிப்பு கேட்டு போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது 70 நாட்களை எட்டி உள்ளது. மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், பல்வேறு சண்டைகளுக்கு நடுவே நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகிய இருவர் எலிமினேட் செய்யப்பட்டனர்.
மேலும் நேற்றைய தினம், ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஜனனி வெளியேறியது அவரது ரசிகர்கள் மற்றும் ஆர்மியை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் இந்த வாரம் மணிகண்டன் அல்லது ஏடிகே ஆகிய இருவரில், ஒருவர் தான் வெளியேற்றப்படுவார் என நெட்டிசன்கள் கணித்து கூறி வந்தனர். ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக, ஜனனி வெளியேற்றப்பட்டார்.
இதற்குக் காரணம், ஜனனி கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சி மீது ஈடுபாடு இன்றி விளையாடி வந்தது தான் என கூறப்படுகிறது. மேலும் ஜனனி சரியாக விளையாடவில்லை என்றாலும், இலங்கை போட்டியாளர் என்பதால் விஜய் டிவி அவரை உள்ளே வைத்திருப்பதாக சில விமர்சனங்களும் எழுந்த நிலையில், நேற்று அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறிய ஜனனி தற்போது போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது... "நான் எப்படி இருந்தாலும், என்னை பிக் பாஸ் வீட்டில் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாக்குகள் தான் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியது. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த நாட்களில் உங்கள் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் என்னை மன்னித்து விடுங்கள். எனினும், இந்த நிமிடம் முதல் என்னால் முடிந்த அனைத்து வழிகளிலும்... உங்களை மகிழ்விக்க முடிந்ததை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.