
விஜய் டிவி தொலைக்காட்சியில், வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து, நான்காவது சீஸனும் பிரச்சனைகள், பாசம், புது புது உறவு, காதல் என கலக்கலாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 ஆவது நாளை எட்டியுள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் தெரிவிக்கும் காட்சி தான் தற்போது புரோமோவில் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான உடையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசும் கமல், இந்த 50 நாட்களில் உங்களுடைய பங்களிப்பு எப்படி இருந்தது என்பதை பற்றி போட்டியாளர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார்.
குறிப்பாக அதிக நேரம் எடுத்து கொள்ளாமல் 1 நிமிடத்தில் பேசி முடிக்கவேண்டும் என கூறுகிறார். இதற்காக முதலில் எழுந்து வரும் பாலாஜி, எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதையம் சொல்லி கொடுத்திருக்கிறேன். அதே போல் ஆண் - பெண் நெருங்கி பழகினால் அது காதல் இல்லை என்பதையும் சொல்லி கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு கமல் ஹாசன் அப்போ பாலாஜி இல்லை என்கிறீர்களா என கலாய்க்கிறார்.
இது குறித்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.