21 வருடத்திற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஏ.ஆர்.ரகுமான் மகள்..! வைரலாகும் அரிய புகைப்படம்..!

Published : Nov 21, 2020, 07:14 PM IST
21 வருடத்திற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஏ.ஆர்.ரகுமான் மகள்..! வைரலாகும் அரிய புகைப்படம்..!

சுருக்கம்

ஆஸ்கர் நாயகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  

ஆஸ்கர் நாயகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழகத்தில் பிறந்து, திரையுலகினர் மத்தியில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை பெற்று இந்தியர்களுக்கே பெருமை சேர்த்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய செல்ல மகள் கதீஜாவை சூப்பர் ஸ்டார் கையில் ஏந்தி இருக்கும் புகைப்படத்தை தற்போது முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் 1999 ஆம் ஆண்டு, படையப்பா படப்பிடிப்பின் போது எடுக்க பட்டது என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மட்டும் இன்றி, சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் போட்டி போட்டு, லைக் மற்றும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இவர், இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தாலும், இதை தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரசிகர்களை மெய்மறக்க செய்யும், இசையால் ஏ.ஆர்.ரகுமான் கவர்ந்தவர். எனவே இவருக்கு உலக அளவில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

கடைசியாக இவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான Dil Bechara படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!