
பிக்பாஸ் வீட்டில் நடந்து முடிந்த 'மணி கூண்டு' டாஸ்கில் ரூல்ஸை பிரேக் செய்து விளையாடிய மூன்று பேரை கமல் வச்சி செய்யும் ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த, மணிக்கூண்டு என்கிற வித்தியாசமான டாஸ்கில், ஒரு சராசரி மனிதன் எப்படி தங்களுடைய வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிகிறானோ, அதே போல் இவர்களும் தங்களுடைய வேலைகளை குறுப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்தார்.
குறிப்பாக, மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும், அலாரமாக மாறி மணியை கணிக்க வேண்டும். வெய்யில், மழை என்று பாராமல் போட்டியாளர்கள் பட்ட கஷ்டத்தை இந்த இரண்டு நாட்களும் பார்க்க முடிந்தது.
கடந்த வாரம் லக்சரி பட்ஜெட் ஜீரோ என்பதால் இந்த வாரம் லக்ஸூரி பட்ஜெட்டை கை பற்ற வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் சின்சியராக விளையாடினார்கள்.
இந்த நிலையில் இந்த மணிக்கூண்டு டாஸ்கில் ரூல்ஸை பிரேக் செய்யும் விதமாக, மூன்று மணி நேரத்தை. 1 மணிநேரம் 26 நிமிடத்தில் கணித்த, பாலாஜி, சுசி, மற்றும் ரம்யா ஆகியோரின் தவறை சுட்டி காட்டி நறுக் என தொகுப்பாளர் கமல்ஹாசன் கேள்விகளை கேட்பது வெளியாகியுள்ளது.
இது குறித்த ப்ரோமோ இதோ....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.