நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்து ரத்தம் சொட்ட சொட்ட தொழும் சிம்பு... சர்ச்சையை கிளப்பும் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்..

சிம்புவின் மாநாடு போஸ்டர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


நடிகர் சிம்பு தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் செம்ம பிஸியாகி வருகிறார் என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில், உடல் எடையை குறைத்து,  சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஃபேஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில்  டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி சிம்பு ரசிகர்களை குஷியாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்தும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் மற்றொரு படமான ’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ’மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21 ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது.

Latest Videos

மேலும் இந்த அறிவிப்பில் ஒரு போஸ்டரும் வெளியாகி இருந்தது. இதில் சிம்பு  இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்றும் காட்சிகள் இருந்தன. இந்த போஸ்டரே அட்டகாசமாக இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு முஸ்லீம் இளைஞர் போல் தலையில் வெள்ளை குல்லா அணிந்து, அவரது நெற்றியில் குண்டு பாய்ந்து, முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட தொழுவது போன்று போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பின்னால் அரசியல்வாதிகளை குறிக்கும் விதத்தில் பேனர்கள், கட்சி கொடிகளும் உள்ளது போல் தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள சிம்புவின் மாஸான மாநாடு போஸ்டர் இதோ...

 

First Look pic.twitter.com/Xb4By0DRoS

— Silambarasan TR (@SilambarasanTR_)

click me!