
ஹிந்தியில் ஹிட் அடித்த பிக் பாஸ், தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி சக்க போடு போட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் வயப்பட்டதால் நிகழ்ச்சி சூடு பிடித்தது. இந்த நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சியின் டி.ஆர்.பி எகிறியது.
ஓவியாவின் காதலை ஏற்க மருத்துவந்தார் ஆரவ். ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியை மேற்கொண்டதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா. வெளியே வந்த ஓவியா ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பை தெரிந்து கொண்டார். அதன் பிறகும் ஆரவ் மீதான காதலை விடவில்லை சில நாட்களில் ட்விட்டரிலும் சிங்கிள் என ஸ்டேட்டஸை மாற்றினார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நூறாவது நாளில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவ் வெளியே வந்தார். மிகச்சிறப்பாக தான் பிக் பாஸால் பெற்ற பிரபலத்தன்மையை பயன் படுத்துகிறார் என்றே குறிப்பிட வேண்டும்.
இதனையடுத்து நேற்று தொலைகாட்சி பேட்டி, வானொலி முகநூல், டிவிட்டர் என பேட்டி கொடுப்பதிலும், ஸ்டேட்டஸ் போடுவதிலும் படு பிஸியாக இயங்கி வருகிறார். அப்போ அப்போ ஓவியா தன் மீது கொண்டுள்ள காதலிற்கு தவறாமல் பதில் அளித்து வருகிறார்.
அவர் பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் ஆரவ் ஒவியாவின் காதலை கண்டு அச்சப்படுகிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. ஓவியாவோடு ரீல் ஹீரோவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.
நிஜத்தில் அவரோடு நான் இணைய வாய்ப்பில்லை. ஓவியாவின் காதல் அல்ல, நான் யாருடைய காதலை ஏற்கும் மனநிலையில் இல்லை நான் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் இது மட்டுமே என் கண்ணிற்கு இப்போது தெரிகிறது என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.