
பிரபலமான பிக்பாஸ் :
பட்டி தொட்டியெல்லாம் பரவிக்கிடக்கும் பிக்பாஸ் உலகளவில் பிரபலமான ஷோவாக உள்ளது. இந்தி. தெலுங்கு என பிற மொழிகளில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது.
பிக்பாஸ் சீசன் 5 :
ராஜு,பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப், தாமரை, சிபி, சஞ்சீவ், வருண், அக்ஷரா, அபிநய்,அபிஷேக், இய்க்கி, இசைவாணி, மதுமிதா, சுருதி, சின்னபொண்ணு, நதியா, நமீதா என மொத்தம் 20 போட்டியாளர்களுடன் சீசன் 5 பிரமாண்டமாக துவங்கியது. முந்தைய 4 சீசன்களை அடுத்து சமீபத்தில் ஒளிப்பரப்பான 5-வது சீசன் அண்மையில் முடிவடைந்தது. 18 போட்டியாளர்களுடன் கலப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவி புகழ் பிரியங்கா, ராஜு இருவரும் இடம் பிடித்திருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...மீண்டும் துவங்கும் தனுஷின் கனவுப்படம்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் நம்ம ஊர் ஹீரோ...
வெற்றியாளர்கள் :
தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் வென்று ராஜு பிக்பாஸ் 5 டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா 2-வது இடத்தையும், பாவனி 3-வது இடத்தையும் பிடிக்க. அமீர், நிரூப் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்தனர்.
ஒரே நேரத்தில் வெறியேறிய போட்டியாளர்கள்:
20 ஹவுஸ்சமேட்ஸ் என்பதால் ஒரே நேரத்தில் இருவர் எலிமினேட் செய்யபட்டனர். அதில் அக்ஷரா, வருண் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறினார். பின்னர் நல்ல நண்பர்களாக உலா வருகின்றனர்.அதோடு பிரியங்கா,அபிஷேக், பாவனி கேங்கும் அவ்வப்போது ஊர் சுற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...ஹோலியில் கவர்ச்சி கலர் பூசிய இலியானா...வெளியான ஹாட் போட்டோஸ்..
ஹோலி பண்டிகை :
இந்நிலையில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஹோலி குறித்து அக்ஷரா பதிவிட்டுள்ளார். அதில் அவரது முடி தாறுமாறாக கலர் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் வருண் என கூறும் அக்ஷரா, அன்று நடைபெற்ற ஹோலி கலவர வீடியோவை சேர்த்துள்ளார். வருண் கையில் கலருடன் அக்ஷராவை நடுரோட்டில் துரத்துகிறார். பின்னர் அவர் மீதும் கார் மீதும் கலரை தூக்கி அடிக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.