'நம்பிக்கை துரோகி ஷாரிக்' ..அதிக ஹாட் பெறும் வனிதா..இன்றைய பிக்பாஸ் அல்டிமேட்..

Kanmani P   | Asianet News
Published : Feb 12, 2022, 11:38 AM IST
'நம்பிக்கை துரோகி ஷாரிக்' ..அதிக ஹாட் பெறும் வனிதா..இன்றைய பிக்பாஸ் அல்டிமேட்..

சுருக்கம்

பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்று தங்களுக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் இன்னும் நெருங்காத நபர்கள் குறித்து தெரிவிக்கும் படி கூறப்படுகிறது...

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 

நேற்றைய ப்ரோமோவில் போலீஸ் டாஸ்க் விளையாடி வரும் தாமரை, நிரூப் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்படுகிறது.. ஒருவரை ஒருவர் ஏகபோகமாக திட்டிக்கொள்கின்றனர்..பிக்பாஸ் சீசன் 5-ல் இருந்த போதும் நிரூப் பெண் போட்டியாளர்களிடம் மோதுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.. தற்போது அதே போக்கை பிக்பாஸ் அல்டிமேட்டிலும் அவர் கடக்கிப்பிடிப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது..

அதோடு முந்தைய போலீஸ் - திருடன் டாஸ்கில் விளையாடிய போட்டியாளர்கள் அவ்வப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தர்..இவர்களில் வனிதா கொஞ்சம் தாராளமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறார்.. இந்த ப்ரோமோவில் ஷாரிக் ஹாசனை  விமர்சிக்கும் வனிதா..அவன் பிராடு நம்பர் ஒன்..அவனை ஜெயில்ல போடுங்க என கடும் கோபத்தில் விமர்சித்தார்..

இன்றைய ப்ரோமோவில் தங்களுக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் இன்னும் நெருங்காத நபர்கள் குறித்து தெரிவிக்கும் படி கூறப்படுகிறது.. அதில் வனிதாவை அபிராமி, தாமரை உள்ளிட்டோர் அக்கா என சொல்லி ஹாட் கொடுக்கின்றனர்.. பின்னர் வனிதா .. ஷாரிக் நம்பிக்கை துரோகம் என கூறி கடுமையாக விமர்சிக்கிறார். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!