இந்த முறையும் ஏமாந்த தாமரை?கண்ணை கட்டி கலங்கவிட்ட பிக்பாஸ்

Published : Apr 07, 2022, 04:32 PM IST
இந்த முறையும் ஏமாந்த தாமரை?கண்ணை கட்டி கலங்கவிட்ட பிக்பாஸ்

சுருக்கம்

அல்டிமேட்டிலும் இடம் பிடித்த தாமரை இந்த முறையும் பணத்தை வேண்டாம் என கூறிவிட்டார். இந்நிலையில் 67 நாட்கள் தாக்குப்பிடிக்க தாமரை எதுவும் இன்றி வெளியேருகிறார்.   

பிக்பாஸ் அல்டிமேட் :

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். ஓடிடி என்பதால் ரசிகர்களின் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. 67 நாட்களுடன் இறுதிக் கட்டத்தை  நெருங்கியுள்ளதுஇந்நிகழ்ச்சி. ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த ரியாலிட்டி தற்போது 6 போட்டியாளர்களுடன் நகர்ந்து வருகிறது.

இறுதி போட்டியாளர்கள் : 

தற்போது  பாலா, நிரூப், ரம்யா பாண்டியன், ஜூலி, தமரைச் செல்வி, அபிராமி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வந்த சாண்டி, தீனா, சதீஷ், ரம்யா பாண்டியனின் மற்ற அனைவரும் வெளியேற ரம்யா மட்டும் இறுதி சுற்றை நெருங்கியுள்ளார்.

பணப்பெட்டியுடன் சுருதி : 

இதில் கடந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் குறைந்த வாக்குகளுடன் இருந்த சுருதி .. முன்னதாகவே ரூ.15 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.  இதற்கென சுருதி, ஜூலி  இருவருக்கும் இடையே  கடும் போட்டி நிலவியது. பின்னர் சுருதி வெற்றி பெற்று பணத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.

கெஸ்ட் என்ட்ரி :
 
இறுதி சுற்றை நெருங்குவதால் எலிமினேட் ஆனா போட்டியாளர்கள் கெஸ்ட்டாக வருகை தந்துள்ளனர்.  அபிநய், அனிதா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது சுருதி கையில் மல்லிகை பூவுடன் வந்தார். தாமரைக்கு மிகவும் பிடித்த மல்லிகை பூவை அவருக்கு கொடுத்தார்.

இந்த வார எவிக்ஷன் :

இந்த வாரத்தில் எவிக்ஷன் ப்ராசஸுக்காக 6 போட்டியாளர்களும் கண் கட்டப்பட்ட நிலையில் இருட்டு அறையில் அமர வைக்கப்பட்டனர். இவர்களில் ரம்யா, தாமரை, பலா, நிரூப் தனியாக அழைத்து செல்லப்படுகின்றனர். இவர்களில் நிரூப் இடம் இத்தனை நாட்கள் உங்கள் அனுபவத்தை கூறுங்கள் என கேட்டகப்படுகிறது. அதே போல தாமரையும் அழைத்து செல்லப்பட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் செல்கிறீர்கள் எங்களிடமும் சொல்ல மாட்டிர்களா என கேட்டவுடன் தாமரை கதறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த முறையும் எதுவும் கிடைக்கவில்லை :

சென்ற 5 வது சீசனில் இடம்பெற்றிருந்த தாமரை ரூ.12 லட்சம் தொகையை எடுத்துக்கொள்வார் என ரசிகர்கள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் தாமரை அந்த முடிவிற்கு வரவில்லை. பின்னர் இறுதி சுற்றுக்கு செல்லாமல் வெளியேறினார். அல்டிமேட்டிலும் இடம் பிடித்த தாமரை இந்த முறையும் பணத்தை வேண்டாம் என கூறிவிட்டார். இந்நிலையில் 67 நாட்கள் தாக்குப்பிடிக்க தாமரை எதுவும் இன்றி வெளியேருகிறார். 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

AI in Cinema: AI வந்துவிட்டது..Cinema-வில் எந்த வேலைகள் மாறப்போகின்றன?
OTT Release issue: 8 வார OTT Window விவகாரம் என்ன? இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?