கானா வினோத் முதல் மீனவப்பெண் சுபிக்‌ஷா வரை – பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல்!

Published : Oct 05, 2025, 11:02 PM IST
Bigg Boss Tamil Season 9 Apsara CJ Subiksha Viyana

சுருக்கம்

Bigg Boss Tamil Season 9 : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் தொடக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரபலங்கள் பலரும் ஒவ்வொருவராக வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள்

விஜய் சேதுபதி 2ஆவது முறையாக தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் தொடக்க விழா தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பங்கேற்றார். அடுத்தடுத்து போட்டியாளர்களாக அரோரா, எஃப் ஜே, விஜே பார்வதி, துஷார், கனி திரு, சபரிநாதன், பிரவின் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ என்று போட்டியாளர்கள் பங்கேற்று வரும் நிலையில் அடுத்த போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 12ஆவது போட்டியாளர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12ஆவது போட்டியாளராக கானா வினோத் பங்கேற்றுள்ளார். இவர், ஒரு சிறந்த பின்னணி பாடகரும், பாடலாசிரியராகவும் திகழ்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலிருந்து கானா பாடல்களை பாட தொடங்கியுள்ளார். அங்கு கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தமிழ் சினிமாவில் பல இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இவ்வளவு ஏன் கெத்து, எய்தவன், புரூஸ் லீ உள்ளிட்ட படங்களிலும் பாடல் வரிகள் எழுதி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் பெட்ரூமுக்குள்ள பாத் டப் – பாத்து ஷாக்கான விஜய் சேதுபதி – இன்னும் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 13ஆவது போட்டியாளர்:

இந்நிகழ்ச்சியின் 13ஆவது போட்டியாளராக வியானா பங்கேற்றுள்ளார். மாடல் அழகியான வியானா, பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உடன் இந்த ஆண்டு களமிறங்கி இருக்கிறார். ரைசா வில்சன் போன்ற மாடல் அழகிகள் பிக் பாஸ் மூலம் ஜொலித்த நிலையில், அவரைப் போன்ற புகழை வியானா பெறுவாரா என்பதை பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 14ஆவது போட்டியாளர்:

இந்நிகழ்ச்சியின் 14ஆவது போட்டியாளராக பிரவீன் ராஜ் தேவ் கலந்து கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 8 மொழிகள் பேசும் பிரவீன் கல்லூரி காலங்களில் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். போலீஸ் வேலை கிடைத்தும் அதற்கு செல்லாமல் மீடியாவிற்கு வந்துள்ளார். ஈரமான ரோஜாவே, கிழக்கு வாசல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முதல் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 15ஆவது போட்டியாளர்:

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சுபிக்‌ஷா குமார். தற்போது பிக் பாஸ் வீட்டின் 15ஆவது போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 16ஆவது போட்டியாளர்:

அப்சரா சிஜே, இவர் ஒரு திருநங்கை. இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா சிஜே களமிறங்கி இருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த சீசனில் புதுமுகங்களில் ஒருவராக அப்சரா களமிறங்கியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 17ஆவது போட்டியாளர்:

இந்நிகழ்ச்சியின் 17ஆவது போட்டியாளராக கோவையைச் சேர்ந்த விஜே நந்தினி பங்கேற்றுள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் அறியப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 18ஆவது போட்டியாளர்:

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் 18ஆவது போட்டியாளராக விக்கல்ஸ் விக்ரம் பங்கேற்றுள்ளார். இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை. விக்கல்ஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றின் மூலமாக பிரபலமான இவர் தந்தூரி இட்லி, வேற மாரி ஆபிஸ், வேற மாரி டிரிப் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரிஸ்களில் நடித்துள்ளார். லெட்ஸ் கெட் மேரீடு, நேசிப்பாயா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தொட்டது எல்லாம் பொன்னாகும் வீடு; பிக் பாஸ் தமிழ் சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 19ஆவது போட்டியாளர்:

இந்த சீசனின் 19ஆவது போட்டியாளராக கம்ரூதீன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கம்ருதீன் என்று சொன்னால் நிறைய பேருக்கு தெரியாது. மகாநதி குமரன் என்று சொன்னால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் குமரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – 20ஆவது போட்டியாளர்:

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் கடைசி போட்டியாளராக அகோரி கலையரசன் பங்கேற்றுள்ளார். பல வித சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு மனைவியுடன் சேர்ந்துவிட்டதாக கூறியிருந்த அகோரி கலையரசன் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டார். எப்படி இருவரும் ஒன்று சேர்ந்தோம் என்பத் குறித்து தனது மனைவி வீடியோவில் குறிப்பிடுவார்கள் என்று கூறியிருந்தார். இந்நிகழ்ச்சியின் போது 25 வயதில் நீங்கள் ஆடாத ஆட்டமா சரி உள்ளே சென்று நன்றாக விளையாடுங்கள் என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!