BiggBoss5 | ரசிகர்கள் கணித்தபடி இந்த வாரம் வெளியேறியது இவர் தான்; ரம்யா கிருஷ்ணன் வெளியேற்றிய முதல் நபர்!!

Kanmani P   | Asianet News
Published : Nov 29, 2021, 07:35 AM ISTUpdated : Nov 29, 2021, 07:37 AM IST
BiggBoss5 | ரசிகர்கள் கணித்தபடி இந்த வாரம் வெளியேறியது இவர் தான்; ரம்யா கிருஷ்ணன் வெளியேற்றிய முதல் நபர்!!

சுருக்கம்

BiggBossTamil 5 | பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கி பெர்ரி ஹவுஸ்மேட்கள், ரம்யா கிருஷ்ணன் முன்னிலையில் ராப் பாடலை பாடி அசத்தினார்.

கடந்த வார எபிசோட் படி பள்ளிக்கூட டாஸ்கின் போது  முழுக்க முழுக்க அக்‌ஷரா மீது தவறிருக்கும் பட்சத்தில் இந்த வார இறுதி எபிசோட்டை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் அக்‌ஷராவை கொஞ்சியதோடு, சிபியை குற்றவாளியாக்கியது ரசிகர்களை எரிச்சல் மூட்டியது. இவ்வாறு எதிர்பாராத பல திருப்பங்களால் அதிரடியாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேஷன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரசிகர்களால் முக்கிய போட்டியாளர் என்று பார்க்கப்பட்ட, இசைவாணி குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார். நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி  மதுமிதா மற்றும் இசைவாணி  என 7 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.  இவர்களில் அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் ஏறி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். 

இந்த வாரம் வெளியேறவுள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியானது. அதன்படி நிரூப் மற்றும் ஜக்கி பெரி ஆகியோர் குறைவான ஓட்டுக்களை பெற்று கடைசி இரண்டு போட்டியாளர்களாக  நின்றனர்.

இவர்களில் நிரூபுக்கு வெளியில் ஆதரவு அதிகம் என்பதாலும் அவர் பரபரப்புக்கு முக்கிய காரணம் என்பதாலும் அவர் இன்று வெளியேற்றப்பட மாட்டார் என சொல்லப்பட்டது. இது ஒருபுறம் இருக்க பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் அதிக ஓட்டுகளை கைப்பற்றி முதல் இரண்டு இடங்களை பகிர்ந்து கொண்டனர். 

ரசிகர்களின் கணிப்பு படியே இந்த வாரம் "ஜக்கி பெரி" தான் வெளியேறியுள்ளார். தற்போது கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரம்யா கிருஷ்ணனால் வெளியில் அனுப்பப்பட்ட முதல் நபர் இவர்தான்.

தமிழ் ராப் பாடகர் மற்றும் காஸ்மெடிக் சர்ஜெரியான ஐக்கி பெர்ரி பிக் பாஸ் வீட்டில் 56 நாட்கள் தாக்குப் பிடித்து இருந்த நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

ஜெர்மனி மாடல் மது போலவே இவர் மீதும் பெரிய வெறுப்புகள் மக்கள் மத்தியில் இல்லாத நிலையிலும் இவர் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கி பெர்ரி ஹவுஸ்மேட்கள், ரம்யா கிருஷ்ணன் முன்னிலையில் ராப் பாடலை பாடி அசத்தினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!