நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது... கட்டிப்பிடி வைத்தியர் காட்டம்!

Asianet News Tamil  
Published : Oct 12, 2017, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது... கட்டிப்பிடி வைத்தியர் காட்டம்!

சுருக்கம்

Bigg Boss Snehan condemns Tittle winner Aarav

முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். 100 நாட்கள் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நூறு நாட்கள் தனது சாணக்கிய தனத்தால் பதினேழு பேர் வரை வெளியேற்றிவிட்டார். ஆனால் கடைசியாக இவருடன் இருந்த கணேஷ் மற்றும் ஆரவ் மட்டுமே கடும் போட்டியாளாரா இருந்தார்கள். கடைசியாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் மற்றும் 55 லட்சம் பரிசு தொகையை ஆரவ் அடித்து சென்றார். 

விரக்தியில் வெளிவந்த சினேகன் சமீபகாலமாக எல்லா கடந்த சில தினங்களாக மீடிக்களில் பேட்டியளித்த வருகிறார். அதில் ஒரு இணையதளத்தில் அவர் பேசிய சிலவிஷயங்கள் மிகவும் முரண்பாடுகளாக உள்ளது. 

அவர் என்னென்ன சொன்னார் என்று இப்போது பார்ப்போம்...

பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்தபின் ஒரு பெரிய நிதானம் வந்திருக்கிறது. என்னை முழுவதும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் நிகழப்போகுதுனு தெரியும். ஆனால், இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு தெரியவில்லை.

இந்தச் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளுமா? இந்தச் சமூகத்தை நான் ஏற்றுக் கொள்வேனானு தெரியவில்லை. ஆனால், இந்த 100 நாள்களில் நான் போட்டுயிருந்த முகமூடியை நானே கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டேன். என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நானே என் மக்களிடம் சொல்லிவிட்டேன்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வை உங்கள் போட்டியாளராக நினைக்கவில்லையா?

நண்பன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் எதிரி பலசாலியாக இருக்க வேண்டும். அந்த வீட்டில் இருந்ததிலேயே என்னைவிட பலசாலி, திறமையாளன், அறிவாளி, தந்திரக்காரன் என எல்லா விதத்திலும் இருந்த கணேஷ் வெங்கட்ராமைதான் எதிரியாகப் பார்த்தேன். நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது.

ஆரவ் ‘பிக் பாஸ்’ டைட்டிலுக்குத் தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா?

அதுவும் பிக் பாஸூக்கே வெளிச்சம். ஏன்னா, எல்லா அக்ரீமென்ட்டும் போட்டதுக்குப் பிறகு பிக் பாஸே சொல்கிறார். ‘இங்கு இருக்கும் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கும் ஒருவரை வெளியே அனுப்புவதற்கும் ஒரு முடிவு எடுப்பதற்கும் பிக் பாஸூக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால், அதற்கான காரணத்தை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று. அப்படி காரணத்தை கேட்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதால் விட்டுவிட்டேன்.

கட்டிப்பிடி வைத்தியத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தினது யார்?

‘டைனமிக் செல்ப் அவைக்’ என்ற தன்னம்பிக்கை முனைப்பு இயக்கத்துக்குப் போனோம். அரவணைத்து அன்புச் செலுத்துவது மானிடத்தின் மேன்மை என்பதைப் புரிந்துகொண்டோம். பயிற்சி எடுத்தவர்களுடன் நாங்கள் அதைப் பகிர்ந்துகொண்டோம். அதுவும், இருவரும் சம்மதித்தால்தான். இல்லையென்றால் கை குலுக்கியும், கண்களைப் பார்த்தும்கூட வாழ்த்துச் சொல்லலாம். ஆனால், கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்வது தாய்மையின் வெளிப்பாடாக இருக்கும் என்ற நோக்கத்துடன்தான் அதை செய்தேன்.

இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷ், சூர்யா, நயன்தாராவுக்கு தமிழக அரசு விருது.. அசுரன் முதல் கார்கி வரை.. விருதுகளை அள்ளிய படங்கள்! முழு லிஸ்ட்!
Mrunal Thakur : வசீகரிக்கும் தோரணையில் மிருணாள் தாகூர்.. மனதை திருடும் போட்டோஸ்