பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை பல புதிய முகங்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், தொடர்ச்சியாக போட்டியாளர்களை அறிமுகம் செய்து வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பிக் பாஸ் வீட்டுக்குள் பல பிரபலங்கள் உள்ளே நுழைந்து வருகின்றனர். அதில் பலர் நமக்கு பரிச்சயமானவர்களாக இருந்தாலும், சிலர் பரிச்சயம் இல்லாதவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகையும் மாடல் அழகிமான அக்ஷயா உதயகுமார் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
தங்கம் முதல் மௌனராகம் வரை.. பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் குக் வித் கோமாளி.. யார் இந்த ரவீனா தாஹா?
யார் இந்த அக்ஷயா உதயகுமார்?
பிரபல தமிழ் பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி பல விருதுகளையும், மக்களின் பாராட்டுக்களையும் பெற்ற திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் அறிமுகமான மாடல் அழகி தான் அக்ஷயா உதயகுமார்.
இவர் ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகவும் பிடித்த நடிகையான இவர், தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறலாம்.