Bigg boss சஞ்சீவின் அக்கா யார் தெரியுமா?.. பரிதாபமாக உயிரிழந்த இணைந்த கைகள் azagana நடிகை...

Kanmani P   | Asianet News
Published : Dec 21, 2021, 09:42 AM ISTUpdated : Dec 21, 2021, 09:47 AM IST
Bigg boss சஞ்சீவின் அக்கா யார் தெரியுமா?.. பரிதாபமாக உயிரிழந்த இணைந்த கைகள் azagana நடிகை...

சுருக்கம்

இணைந்த கைகள் படத்தில் ராம்கிக்கு ஜோடியாக சிந்து நுரையீரல் பிரச்சனை காரணமாக 33 வயதில் உயிரிழந்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்கிறது. விஜய்யின் சந்திரலேகா, நிலாவே வா, புதிய கீதை, பத்ரி உள்ளிட்டப் படங்களில் சஞ்சீவை நடிக்கவும் வைத்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம்தான் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றார். மாநாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் மூச்சுவிடாத அடுக்கடுக்கான தமிழ் அனைவரையும் ரசிக்க வைத்தது. 

இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல்  போட்டியாளராக கலக்கி வருகிறார். இவரது நடுநிலை தன்மை ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.  சஞ்சீவ் பற்றிய அவருடைய மனைவியும் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை பதிவு செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட சஞ்சீவ்க்கு ஒரு அக்கா இருந்திருக்கிறார் என்பதும் அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை என்பதும் பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அவரது பெயர் சிந்து, ராம்கி அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர்  சின்னத்திரைக்கு திரும்பினார் சிந்து.  

இந்நிலையில் அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை நீண்ட நாட்கள் இருந்துள்ளது.பிறகு நுரையீரல் பிரச்சினை போன்ற பல பிரச்சனைகள் வர 33 வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவர் இறக்கும்போது அவருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அவரை தாய்மாமன் சஞ்சீவ் தந்தை ஸ்தானத்திலிருந்து பாதுகாத்து வருகிறார். இதை கடந்த வாரம் நிகழ்ச்சியில் கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!